MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: எனது வீடு 20 ஆண்டு காலத்திற்கு முந்தையது (சட்டகோப்பு கட்டுமானம் அல்ல). 1800 ச.அடி கொண்டது. இதன் இரு தளங்களில் 10 குடித்தனங்கள் உள்ளன. தற்போது, மொட்டை மாடியில் தலா 450 ச.அடியில் இரு வீடுகள் கட்ட்ட இருக்கிறேன்.(ஆஸ்பெஸ்டால் கூரை மட்டுமே) இதற்கெனெ, தனியாக பூமியிலிருந்து பில்லர் அமைத்து அதன் மீது புதிய கட்டுமானம் அமைக்க வேண்டுமா? அல்லது எப்போதும் போல் தளம் மீது சுவர் அமைத்திட்டால் போதுமா? கீழே தாய்ச் சுவர்கள் தாங்குமா? பெருமாள் சிவன், மின் ஊழியர், சூளை


Answer:


தங்கள் கேள்வியில் எந்தவகை அடிமண், எந்தவகையான அடித்தளம் ( (open Trench Continuosfootingor stub column - gradebeam)) என்ற விவரங்கள் தரப்படவில்லை. 

அடித்தளத்தின் அளவுகள், தரைத்தள மற்றும் முதல் தளத் தாய்ச்சுவர்களின் செங்கல் சுவர்களின் அகலங்களும் தரப்படவில்லை. இவை இருந்தால் தான் G+2 தளங்கள் (மொட்டை மாடி வீடுகள் உட்பட) கட்டமுடியுமா? சுவர்களும் அடித்தளமும் தாங்குமா? என்ற விவரங்களை ஆய்வு செய்ய முடியும். எனவே, திறமையும் அனுபவமுள்ள ஒரு வடிவமைப்பு பொறியாளரை அணுகுங்கள்.



Q: அஸ்திவாரம் மற்றும் செப்டிக் டேங்க் தோண்டும் போது கிடைக்கிற மண்ணையே பேஸ் மட்டம் நிரப்புவதற்கு பயன்படுத்தலாம் என்கிறார்களே அது சரியா? அது பலமுள்ளதாக இருக்குமா? - முருகேசன், குன்றத்தூர்.’


Answer:

முதலில் நீங்கள் வீடுகட்டுமிடத்தில் - அடி மனைத்தளத்தில் கிடைக்கும் மண்வகை எது - செந்சரளையா, பருமணலா, நொய் மணலா, கெட்டிக் களிமண்ணா, மென் களிமண்ணா என்பது தெளிவாக தெரிவிக்கவில்லை .

குன்றத்தூர் என்றால் அடையாறு ஒட்டியுள்ள பகுதியில் மணல் கிடைக்கலாம். எனவே செந்சரளை மண், பருமணல் போன்றவற்றை அடித்தள வெட்டு மண்ணைக் கொண்டு நிரப்பலாம்.

நொய்மணல், களிமண் / குறிப்பக மென் களிமண்ணாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை நிரப்பு மண்ணாகப் பயன்படுத்தக் கூடாது.
 

மாற்றாக கருங்கல் உடை தூளைக் (Quarry Dust/Stone Crusher Dust) கொட்டி நிரப்புவது சிறப்பானது; செலவும் குறைவு.  
 

மேலும் கரியான் எதிர்ப்பு தருவதாகவும் இது அமையும்.



Q: மாதவரம் அடுத்த மாத்தூரில் எனது புராஜெக்ட் செய்ய உள்ளேன். ஜி+2 என்ற அளவில் 8 வீடுகள் இதில் அமைய உள்ளன. அடிக்கடி வெள்ளம் சூழும் பகுதியில் அதற்கேற்ற வகையில் சிறப்பு அடித்தளம் அமைக்க வேண்டும் என்கிறார்களே. அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்....                                                                 - ராஜசேகர், பிரிமீயம் பில்டர்ஸ்


Answer:

 
உங்கள் மாத்தூரில் கட்டப்போகும் அடிமனையின் கீழ்மண் எந்தவகை என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை.
 
 களிமண் வகையாக இருந்தால்..
 
அடிபெருத்த குத்துதூண்கள்- இரண்டு, மூன்று, 
 
 நான்கிணைந்தவை+மேல் தொப்பி( Under reamed piles -2,3, or 4 groups  with top pile cap) உடைய 4.50 மீட்டர் ஆழம் கொண்டவைகளை மிக எளிதாக அமைக்கலாம். மிகவும் பாதுகாப்பானவை.
 
களிமண் அல்லாத பிறவகை மண்ணாக (மணல், சுக்காம் பாறை போன்றா கூடுதல் தாங்குதிறன்  கொண்டவை) இருந்தால்.. உள்ள மண்ணை 450 மிமீ/600 மி.மீ ஆழத்திற்கு மேம்படுத்தி - அதன்மீது   தனி பரவல் அடித்தளங் களை  (Isolated footings)  அமைக்கலாம்.
 
• இரண்டு நிகழ்வுகளிலும் கட்டப்போகும் வீட்டின் தரைத் தளமட்டம் அருகில் உள்ள சாலை    மட்டத்திற்கு மேலே 1.20 மீட்டர்/1.50 மீட்டர்
(4 அடி/5 அடி) வரை உயரமுடையதாக  அமைக்கப்பட வேண்டும். 
 
 மேலும் விவரங்களுக்கு ஒரு நல்ல கட்டுமானப் பொறியாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
 



Q: நான் எனது ஜி+2 கட்டுமானத்திற்காக கிட்டத்தட்ட 16 பில்லர்களை கடந்த அக்டோபர் மாதம் எழுப்பி இருந்தேன். வெறும் அஸ்திவாரம் வரையில் கான்கிரீட் அமைக்கப்பட்டு தரையில் இருந்து டி.எம்.டி. சென்ட்ரிங் கம்பிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. மழையின் காரணமாக 2 மாத காலம் கட்டுமானப் பணிகளை அப்படியே விட்டு விட்டேன். தற்போது பணிகள் துவங்கலாம் என்றால், டி.எம்.டி கம்பிகள் அதிகமாக துருப்பித்து இருக்கின்றன. துருவை அகற்றாமல் பணிகளை தொடரலாமா? கூடாது என்றால், துரு அகற்ற என்ன வழி? -   -   ஜீவ பிரகாசம், தனியார் நிறுவன கணக்காளர், திருநின்றவூர்.


Answer:

நீட்டிவிடப்பட்ட டி.எம்.டி உறுதியூட்டிக் கம்பிகள் துருப்பிடித்து இருந்தால் கீழ்க்குஷீப்பிடும் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்.
• கம்பிகளின் மீதுBrush  கொண்டு RUST CLEANER  என்ற வேதித் திரவத்தைப் பூசி - குறைந்தது 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.
• பின்பு Wire Brush  கொண்டு கம்பிகளைச் சுரண்டி துருத்துகள்களை அகற்றுங்கள்.
• அதன் பின்னர் நன்னீர் கொண்டு - Water Hose Pipe கொண்டு கம்பிகளைச் சுத்தம் செய்து காய விடுங்கள்.
• நன்றாகக் காய்ந்தபின்பு (2 முறைகள் - இரண்டு மணி) நேர இடைவெளியில் - கம்பிகளின் மீது துருத் தடுப்பான் பூச்சு (Corrosion Inhibitor - say CERA REBARCOTE /Dr Fixit............. ) அடித்து உலரவிடவும்.
 
அதற்குப் பின்பு உங்களின் கட்டுமான வேலைகளைத் தொடரலாம்.



Q:

சேலம் அருகே 20 தனி வீடுகள் கொண்ட தொடர் வீடுகள் கட்ட உள்ளேன். செயற்கை மணல் பூச்சு வேலைக்கு நல்லது என்கிறார்கள். அதே சமயம் ஜிப்சம் பிளாஸ்டரும் பூச்சு வேலைக்கு நல்லது என்கிறார்கள் இரண்டில் எதை நான் தேர்வு செய்வது?

- ஆர்.ஆர். கான்ட்ராக்டர், சாரதி, செந்திட்டு 


Answer:

• பூச்சு வேலைகளுக்கு ‘‘பூச்சு மணல்’’ எனும் செயற்கை மணலைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
 
• செயற்கை மணலை உட்சுவர் பூச்சு வேலை களுக்கும் வெளிச்சுவர் பூச்சு வேலைகளுக்கும் அச்சமின்றிப் பயன்படுத்தலாம்.
 
• ஆனால் ஜிப்சம் பிளாஸ்டர் (Level Plast போன்றவை) உட்சுவர்கள் மற்றும் கூரை உள்விதானம் (ceiling  surfaces ) இவற்றிற்கு மட்டுமே ஏற்றது.
 
• வெளிச் சுவர்பூச்சு வேலைகளுக்கு ஜிப்சம் பிளாஸ்டரைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படித்தினால் மழைநீரில் ஊறி வலுஇழந்து பெயர்ந்து விழுந்துவிடும்.



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000