Q: வீடு கட்டும் போது ஹால் எவ்வளவு பொ¤ய அளவில் அமைக்க முடியும்? நடுவில் பில்லர் வராமல் இருக்க வேண்டும். பில்லர்களில் அதிக பட்ச இடைவெளி எவ்வளவு விடலாம்?
பதில் அளிப்பவர் : மாதவன்,
தலைமை பொறியாளர் , தனியார் கட்டுமான நிறுவனம்
ஹால் என்பது இந்தியாவைப்பொறுத்த வரை வாழும் இடம். இரண்டு Bedroom, ஒன்று அப்பா அம்மா, இன்னொன்று குழந்தைகள் Bedroom என்று தனியாக படுத்து தூங்குவது, நம் கலாச்சாரம் இல்லை!
80% வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் கலாச்சாரம் நம்முடையது!
நீங்கள் தனி bedroom கொடுத்தால், நீங்களே உங்கள் பிள்ளைகளை கெடுக்கிறீர்கள், என்று அர்த்தம்!
அப்படி 90% நேரம், நீங்கள் கழிப்பது Hall என்பதால், 50 % இடம் உங்கள் ஹால் இருக்க வேண்டும்!
மொத்த carpet ஏரியா 800 sft என்றால் hall 400 sft இருந்தால் நன்றாக இருக்கும். 24 x 16 384 Sq.ft அல்லது 18 x 18 எவ்வளவு? 324 Sq. ft இவ்வளவு பெரிய Hall இருக்க வேண்டும் 4 பேர் வசிக்கும் வீட்டில்!
மினிமம் குறைந்தபட்ச அளவுகள் என்னுடைய அனுபவத்தில் கொடுக்கிறேன்!
Hall - 16 அடி நீளம், 11 அடி அகலம்.
Kitchen - 10 அடி நீளம், 8 அடி அகலம்.
Bedroom - 10 அடி நீளம், 10 அடி அகலம்.
பாத்ரூம் - 7 அடி நீளம், 5 அடி அகலம்.
verandha- 6 அடி நீளம் 8 அடி அகலம்.
படிகள் - 14 அடி நீளம் 3.5 x 2 = 7 அடி அகலம்.
பூஜை - 5 அடி நீளம் 5 அடி அகலம்.
ஒரு Lift அல்லது Car Park என்றால் minimum அளவு கொடுக்கும் நாம், மனிதன் வாழும் இடம் கண்டிப்பாக தாராளமாக இருக்க வேண்டும்.
சின்ன அறையில் oxygen இல்லாமல் கொரோனா போன்ற வைரஸ் Recylced A/C அறையில் மிக எளிதாக மனிதர்களை கொல்லும்!
காற்றோட்டம், வெளிச்சம் மிகவும் முக்கியம்! அது சின்ன பெட்டி போன்ற அறைகளில் கிடைக்காது! எனவே, ஆரோக்கியமாய் வாழ, நான் சொன்ன அளவுகள் வைத்து வீடு கட்டுங்கள்!
பில்லர்கள் பொறுத்தவரை அது ஒரு பிரச்சினையே இல்லை. சாதாரண இடைவெளி 12 அடி. ஆனால் கால் பெரிதாக இருக்கிறது, என்றால் நாம், பில்லர் தள்ளி வைத்து, 20 அடி கூட இடைவெளி விடலாம்.
என்ன கொஞ்சம் கம்பி நிறைய செலவாகும். தலைக்குமேலே பீம் பிரம்
மாண்டமாக இருக்கும்.
நான் கல்யாண மண்டபம் டிசைன் செய்யும் பொழுது, என்னுடைய Client, 50 அடி அளவு Hall பில்லர் நடுவில் இல்லாமல் design செய்து உள்ளேன். பெரிய beam போட்டு எவ்வளவு பெரிய span என்னும் இடைவெளி விடலாம். கல்யாண மண்டபத்தில் நடுவில் தூண் இருந்தால் மறைக்கும் அல்லவா? அதனால் செலவு செய்து, நடுவில் உள்ள பில்லர் இல்லாமல் டிசைன் செய்ய வேண்டும்.
ஆனால் வீடுகளுக்கு அப்படி எல்லாம் அவசியமில்லை. சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் நாம். எனவே 16 அடி ஹால் அளவு வைத்து, நடுவில் பில்லா¢ இல்லாமல், நாம் ஹால் கட்டலாம்.
Q: சார்! நான் திருவள்ளூரில் ஜிபிளஸ் ஒன்று வீடு கட்டி வருகிறேன். வீடு கட்டி விடும்போதே காம்பவுண்ட் சுவரை கட்டுமானமும் மேற்கொள்ள வேண்டுமா? என்பது என் ஐயம். ஏனெனில், வீட்டின் அஸ்திவாரத்துடன் காம்பவுண்ட் அஸ்திவாரத்தை இணைக்க வேண்டும்‘ என எனது பொறியாளர் கூறுகிறார். இது எந்த அளவிற்கு உண்மை?’ என்று தாங்கள் விளக்க முடியுமா?
நா.முத்துகுமார், செவ்வா பேட்டை
வீட்டின் கட்டுமானம் முடியும் பொழுது தனியாக காம்பவுண்ட் சுவர் கட்டினால் போதுமானது. ஒரு சிலர் இப்பொழுது பெல்ட் பீமில் இருந்து சில ஸ்டீல்ராடுகள் இணைத்து காம்பவுண்ட் அஸ்திவாரம் போடுகிறார்கள். இது சரியான முறை அல்ல. நீங்கள் காம்பவுண்டிற்கு பைல் பவுண்டேஷன் முறையிலோ, அல்லது கருங்கல் முறையிலோ அஸ்திவாரம் போட்டு காம்பவுண்ட் கட்டலாம். அது வீட்டு வேலைகள் நிறைவடையும் தருவாயில் காம்பவுண்ட் கட்டினால் போதுமானது. அந்த வீட்டினுடைய பெல்ட் பீமில் காம்பவுண்ட்சுவரை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில காண்டிராக்டர்கள் பொறியாளர்கள் வீட்டின் வேலையுடன் காம்பவுண்ட் வேலையும் தமக்கே கிடைக்க வேண்டும் என்று கூட, முதலிலேயே காம்பவ்ண்ட் பில்லரை அஸ்திவாரத்துடன் இணைத்துக் கட்ட வற்புறுத்துவார்கள். இது தேவையற்றது.
வீட்டின் அஸ்திவாரம் ஆழம் 5 அடி என்றால், காம்பவுண்டின் அஸ்திவாரம் 2 அடி 3 அடி வரை தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, தங்களுடைய மண்ணின்தன்மைக்கு ஏற்ப காம்பவுண்ட் சுவருக்கு அஸ்திவாரம் அமைத்து தக்க பொறியாளரின் ஆலோசனைப்படி செயல்படுத்துங்கள்.
Q: வானுயர்ந்த கட்டிடங்களின் வெளிப்பகுதி முழுவதும் ஏன் கண்ணாடிகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது? வெயிலின் தாக்கத்தால் கண்ணாடிகள் ஏற்கும் அதிக வெப்பத்தை எப்படி சமாளிக்கிறார்கள்? நிறை குறைகள் என்ன?
பதில் அளிப்பவர் : சந்திரன், முன்னாள் வங்கி மேல்நிலை அதிகாரி.
1900களில் இருந்தே அமெரிக்காவில் பிரபலமான ஒரு கட்டடக் கலை வடிவம்தான் இந்த steel & glass skyscrapers. 1884இல் முதல் வானளாவிய கட்டடம் வில்லியம் ஜென்னி என்பவரால் அமெரிக்காவில் கட்டப்பட்டது. அப்போது நகரங்களுக்கு மக்கள் அதிக அளவு குடியேறியதில் நகரங்களுக்குத் தேவையாக இருந்தன. இந்த கட்டடங்கள், அலுவலகங்களுக்கும் சரி அபார்ட்மெண்ட்களுக்கும் சரி. ( Centre Rot என்னும் அதுதான் இப்போது இங்கு நடந்துகொண்டிருக்கிறது! (அது ஒரு பெரிய டாபிக்!) அவை அப்போதே வெப்பத்தை தடுத்துத் திருப்பியனுப்பும் (deflection) முறையிலும், ஏற்றி இறக்கி காற்றை அளவாக உள் வாங்கும் முறையிலும் கிளாஸ் வேண்டிலேஷனுடனும் அமைக்கப் பட்டன. கண்ணாடியின் நோக்கம் அதிக இயற்கை ஒளியை உள்வாங்குதல், மின்சார விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல், வெளியிலுள்ள அழகிய பசேலென்ற காட்சிகளைக் கண்டு கொண்டே வேலை செய்தல், ஆகியவைதான்.
குளிர்சாதன வசதி கார்பன் footprints ஐ அதிகமாக்குவது அதன் மறு பக்கம். நாளாக ஆக அதிகரித்து விட்டது. ஆனால் உயரம் குறைவான கண்ணாடி ஜன்னல்களே அதிகமில்லாத பங்களாக்களிலும் கூடத்தான் ac உபயோகமாகிறது.
இந்த வகை கட்டுமானம் சென்ற இரு நூற்றாண்டுகளாய் உலகெங்கும் பரவியது. உயரம் அதிகமாக ஆக கட்டடங்கள் காங்கிரீட், ஸ்டீல், கண்ணாடி உபயோகித்துக் கட்டினால்தான் அழகு என்றாகி விட்டது. உயரம் குறைவான கட்டடங்களும் அவ்வாறு அழகுக்காக கட்டப்படுகின்றன. பலமான அஸ்திவாரங்களுடன், நில நடுக்கம் தாங்கும் வகையில் கட்டப்படுகின்றன. இவையும் அழகாகத்தான் உள்ளன. டோரோன்டோவிற்குள் நுழையும் வழியில் வெகு தூரம் போகும் வழி இப்படி ஓர் அழகுதான். இது போல் பல இடம். நியூயார்க், சிகாகோவும் பல நகரங்களும் அப்படியே. வாஷிங்டன் dc யில் இவ்வகைக் கட்டடங்கள் அதிகமில்லாமல் பாதுகாக்கிறார்கள்.
Q: சிவில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டு விட்டேன். ஆனாலும் கட்டுமானம் தொடர்பான பல வேலைகள் எனக்கு தெரியும். எனவே சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிய விருப்பம். கட்டுமான வேலைக்கு வெளிநாடு செல்லலாமா?
Q: ஏ.ஏ.சி பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு கட்டலாமா? அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடுமா?
பதில் அளிப்பவர் : பாலச்சந்திரன், தமிழ்நாடு அரசு-இல் நில அளவையர் 2022 முதல் –தற்போது வரை
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|