MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: என் நண்பனின் பழைய வீடு ஒன்று ( சுமார் 45 ஆண்டு காலத்தியது) 'மெட்ராஸ் டெரஸ்' வகை கட்டுமானமாகும்.. ஜிூ 1 வீடு அது.. இப்போது அது மோசமான் நிலையில் உள்ளது. நாம் லேசாக அதிர்ந்து நடந்தால் மேலே சீலிங்கிலிருந்து மண் கொட்டுகிறது.. கட்டடத்தின் பல பாகங்க்கள் இப்படித்தான் உள்ளது வீடு முழுக்க மண்ணாகிறது. வசிக்கவே முடியவில்லை. இதை எப்படி தற்காலிகமாக சரி செய்வது? மரமாத்து வேலைகளை எப்படி தொடங்குவது? (அவர்களால் பெரும் பணம் செலவழிக்க முடியாது) - இசைப்பிரியன், திருச்சி..


Answer:

மெட்ராஸ் டெரஸ் ரூஃபிங்கில் உள்ள மேல் பகுதியை முற்றிலுமாக எடுத்துவிட்டு (றுழழனநn சுயககநச- ஐ மட்டும் வைத்துக் கொண்டு) புதிதாகத் தளம் போடுங்கள். உள்;ர் - கட்டுமானப் பொறியாளர் உதவியை நாடுங்கள். அவர் செய்ய வேண்டியவைகளை எடுத்துச் சொல்வார். 



Q: எங்கள் பக்கத்து வீட்டில் தரை தளத்தில் லேத் பட்டறை இருக்கிறது. அதில் இயந்திரங்கள் இயங்கும் போது எங்கள் கட்டடமும் அதிர்கிறது ( அப்பகுதியில் எல்லா வீடுகளும் ஒட்டியே இருக்கும்..) இதனால் எங்கள் கட்டத்திற்கு ஆபத்து வருமா? விளக்கவும்.. அந்த வீட்டின் உரிமையாளரே அந்த பட்டறையின் முதலாளி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.. தினமும் 10 மணி நேரம் வீடு அதிர்ந்து கொண்டே இருப்பது பெரும் மன உளைச்சலாக இருக்கிறது. தகுந்த ஆலோசனை சொல்லி உதவவும் - ஆராவமுதன்., கொரட்டூர்.., பேன்சி ஸ்டோர்


Answer:

லேத் பட்டறையிலிருந்து ஏற்படும் அதிர்வுகள் மிகுதியாக இருப்பதாகத் தெரிகின்றது. அனுபவமும் திறமையுள்ள ஒரு பொறியாளரை அழைத்துச் சென்று கள ஆய்வு செய்யச் சொல்லுங்கள். அவர் சொல்லும் வழிமுறைகளைக் கடைபிடியுங்கள். தொடர் அதிர்வுகள் கட்டத்தின் நிலைத்தன்மையை பாதிக்கவே செய்யும்.



Q: டியர் வீரப்பன் சார்! நான் ஆவடியில் ஜிூ1 கட்டுமானம் ( 800 ச.அடி) கட்ட இருக்கிறேன்.. சிமெண்ட் பொறுத்தவரை பலவித கிரேட் வகைகள் இருக்கின்றனவாம்.. நான் எதை? எதற்கு? பயன்படுத்த வேண்டும். இதை என் பொறியாளர் பார்த்துக் கொள்வார் என்றாலும்.., நானும் அந்த விவரங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.. - செழியன்.. ,வழக்கறிஞர், ஆவடி


Answer:

சிமெண்ட் வகைகளில் OPC-23 Grade, 43 Grade & 53 Grade   என மூன்று வகைகள் உள்ளன. அதிகமாக புழக்கத்தில் இருப்பது  OPC-53 Grade   என்பதே. இதைத் தவிர எரி சாம்பல் கலந்த PPC எனும் சிமெண்ட்டும் உள்ளது. கட்டுமான வேலை கள் அனைத்திற்கும் PPC  சிமெண்ட்டையே பயன்படுத்திடப் பரிந்துரைக்கின்றோம்.



Q: டியர் சார்! தமிழ் நாட்டில் பொறியியல் தரம் இப்படி குறைந்து போனதற்கு காரனம் தமிழ் வழி கற்றல் தான் என்கிறார் என் பேராசிரியர்.. இதற்கு எளிய தமிழில் கட்டுமானக் கட்டுரைகள் எழுதும் உங்கள் மறுப்பு என்ன? தமிழ் வழி கற்றல் காரணமிலையெனில், பொறியியல் தரம் இப்படி குறைந்து போனதற்கு வேறு என்ன தான் காரணம்?. வட இந்திய மாநிலங்க்களிலும்., அண்டை மாநிலங்களிலும் பொறியியல் தரம் சூப்பராக இருப்பதற்கு அவர்கள் ஆங்கிலம் வழி கற்பது தானோ? - பிரதீப்,பீ. ,சிவில் நான்காம் ஆண்டு


Answer:

முற்றிலும் தவறான அரைவேக்காட்டுத்தனமான முடிவு உங்களின் பேராசிரியருடையது. தமிழ்வழிக் கற்றவர்கள் பலரும் பெரும் பொறுப்புக்களிலும் உயர் பதவியிலும் உள்ளனர். தமிழ்வழிக் கற்றல் நல்ல புரிதலையே ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியின் தரம் குறைந்து போனதற்கு முக்கியமான காரணங்கள்:

1. கல்வியே வியாபார ரீதியில் அணுகப்பட்டு அளிக்கப்படல்.
2. திறமையும் அனுபவமும் இல்லாத பேராசிரியர்கள்
3. கல்லூரியில்   ஆய்வகம், நூலகம் மற்றும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமை.
4. பொறியியல் கல்வி - வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாமல் புற்றீசல் போல 

நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளைத் திறந்தமை. எனவே, இன்றுள்ள 565 பொறியியல் கல்லூரிகளில் உதவாக்கரை 500 பொறியியல் கல்லூரிகளை உடனே மூடி - அவற்றை ஐவுஐ தொழிற்கல்விப் பயிலகங்களாக மாற்றிட வேண்டும் என ஈராண்டுகளாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பதிலளித்தவர்  மூத்த பொறியாளர் பொறி.அ.வீரப்பன்



Q: ஒரு அறிமுகப் பொறியாளராக எனக்கு அடிப்படை சந்தேகம். ஒரு கட்டடத்தை வடிவமக்கும்போது ஒரு வடிவமைப்பு பொறியாளர் என்னென்ன விrயங்களை, முக்கிய கருத்துக்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.? - நரேஷ். கோவை.


Answer:

நீங்கள் ஒர் அறி முகப் பொறி யாளர் என்றால் - உங்கள் கேள்வியைப் படித்து எனக்குத் தலை சுற்றுகிறது, குறைந்தது 6 மாதங்களில் ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்க வேண்டியதை - 10 வரிகளில் கேட்பதை நினைத்து தலை சுற்றுகிறது.

வடிவமைப்பு பொறியாளர்க்கு அடிப்படைக் கட்டுமானப் பொறியியல், பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருட்களின் தன்மைகள், வடிவமைப்பு பகுப்பாய்வு (Analysis of Frames) முறைகள், அடித்தள மண்ணின் தாங்குதிறன்கள், அவற்றிற்கேற்ற அடித்தள வகைகள், அவற்றின் வடிவமைப்பு முறைகள் - கட்டுமானத் தலத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் களப்பணி இவையயல்லாம் தேவையான அடிப்படைத் தகுதிகள் எங்கள் நிறுவனம் (Er. A. veerappan & Association)  வெளியிடும் கட்டுமானப் பொறியாளர் மாத இதழில் Er. இராஜன் எனும் வடிவமைப்புப் பொறியாளர் எழுதிவரும்'' Designing  Multistoreyed Buildings   எனும் தொடர் கட்டுரைகளைப் படியுங்கள்.  (இந்தக் காலத்து இளைஞர் எல்லாம்  Fast Food  - அய் விரும்புவது போல Fast structural Design Practice   கற்றுக்கொள்ள நினைக்கிறார்களோ! )

 

Answered By Er.A. Veerappan



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000