MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: வீடு கட்டும் போது ஹால் எவ்வளவு பொ¤ய அளவில் அமைக்க முடியும்? நடுவில் பில்லர் வராமல் இருக்க வேண்டும். பில்லர்களில் அதிக பட்ச இடைவெளி எவ்வளவு விடலாம்?


Answer:

பதில் அளிப்பவர் : மாதவன், 
தலைமை பொறியாளர் , தனியார் கட்டுமான நிறுவனம்

ஹால் என்பது இந்தியாவைப்பொறுத்த வரை வாழும் இடம். இரண்டு Bedroom, ஒன்று அப்பா அம்மா, இன்னொன்று குழந்தைகள் Bedroom என்று தனியாக படுத்து தூங்குவது, நம் கலாச்சாரம் இல்லை!
80% வீடுகளில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் கலாச்சாரம் நம்முடையது!
நீங்கள் தனி bedroom கொடுத்தால், நீங்களே உங்கள் பிள்ளைகளை கெடுக்கிறீர்கள், என்று அர்த்தம்!
அப்படி 90% நேரம், நீங்கள் கழிப்பது Hall என்பதால், 50 % இடம் உங்கள் ஹால் இருக்க வேண்டும்!
மொத்த carpet ஏரியா 800 sft என்றால் hall 400 sft இருந்தால் நன்றாக இருக்கும். 24 x 16 384 Sq.ft  அல்லது 18 x 18 எவ்வளவு? 324 Sq. ft   இவ்வளவு பெரிய Hall இருக்க வேண்டும் 4 பேர் வசிக்கும் வீட்டில்!
மினிமம் குறைந்தபட்ச அளவுகள் என்னுடைய அனுபவத்தில் கொடுக்கிறேன்!
Hall - 16 அடி நீளம், 11 அடி அகலம்.
Kitchen - 10 அடி நீளம், 8 அடி அகலம்.
Bedroom - 10 அடி நீளம், 10 அடி அகலம்.
பாத்ரூம் - 7 அடி நீளம், 5 அடி அகலம்.
verandha- 6 அடி நீளம் 8 அடி அகலம்.
படிகள் - 14 அடி நீளம் 3.5 x 2 = 7 அடி அகலம்.
பூஜை - 5 அடி நீளம் 5 அடி அகலம்.
ஒரு Lift அல்லது Car Park என்றால் minimum அளவு கொடுக்கும் நாம், மனிதன் வாழும் இடம் கண்டிப்பாக தாராளமாக இருக்க வேண்டும்.
சின்ன அறையில் oxygen இல்லாமல்  கொரோனா போன்ற வைரஸ் Recylced A/C அறையில் மிக எளிதாக மனிதர்களை கொல்லும்!
காற்றோட்டம், வெளிச்சம் மிகவும் முக்கியம்! அது சின்ன பெட்டி போன்ற அறைகளில் கிடைக்காது! எனவே, ஆரோக்கியமாய் வாழ, நான் சொன்ன அளவுகள் வைத்து வீடு கட்டுங்கள்!
பில்லர்கள் பொறுத்தவரை அது ஒரு பிரச்சினையே இல்லை. சாதாரண இடைவெளி 12 அடி. ஆனால் கால் பெரிதாக இருக்கிறது, என்றால் நாம், பில்லர் தள்ளி வைத்து, 20 அடி கூட இடைவெளி விடலாம்.
என்ன கொஞ்சம் கம்பி நிறைய செலவாகும். தலைக்குமேலே பீம் பிரம் 
மாண்டமாக இருக்கும்.
நான் கல்யாண மண்டபம் டிசைன் செய்யும் பொழுது, என்னுடைய Client, 50 அடி அளவு Hall பில்லர்  நடுவில் இல்லாமல் design செய்து உள்ளேன். பெரிய beam போட்டு எவ்வளவு பெரிய span என்னும் இடைவெளி விடலாம். கல்யாண மண்டபத்தில் நடுவில் தூண் இருந்தால் மறைக்கும் அல்லவா? அதனால் செலவு செய்து, நடுவில் உள்ள பில்லர் இல்லாமல் டிசைன் செய்ய வேண்டும்.
ஆனால் வீடுகளுக்கு அப்படி எல்லாம் அவசியமில்லை. சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் நாம். எனவே 16 அடி ஹால் அளவு வைத்து, நடுவில் பில்லா¢ இல்லாமல், நாம் ஹால் கட்டலாம்.



Q: சார்! நான் திருவள்ளூரில் ஜிபிளஸ் ஒன்று வீடு கட்டி வருகிறேன். வீடு கட்டி விடும்போதே காம்பவுண்ட் சுவரை கட்டுமானமும் மேற்கொள்ள வேண்டுமா? என்பது என் ஐயம். ஏனெனில், வீட்டின் அஸ்திவாரத்துடன் காம்பவுண்ட் அஸ்திவாரத்தை இணைக்க வேண்டும்‘ என எனது பொறியாளர் கூறுகிறார். இது எந்த அளவிற்கு உண்மை?’ என்று தாங்கள் விளக்க முடியுமா?


Answer:

நா.முத்துகுமார், செவ்வா பேட்டை 


வீட்டின் கட்டுமானம் முடியும் பொழுது  தனியாக காம்பவுண்ட் சுவர் கட்டினால் போதுமானது. ஒரு சிலர் இப்பொழுது பெல்ட் பீமில் இருந்து சில ஸ்டீல்ராடுகள் இணைத்து காம்பவுண்ட் அஸ்திவாரம்  போடுகிறார்கள். இது சரியான முறை அல்ல.  நீங்கள்  காம்பவுண்டிற்கு பைல் பவுண்டேஷன் முறையிலோ, அல்லது கருங்கல் முறையிலோ அஸ்திவாரம் போட்டு காம்பவுண்ட் கட்டலாம். அது வீட்டு வேலைகள் நிறைவடையும் தருவாயில் காம்பவுண்ட் கட்டினால் போதுமானது. அந்த வீட்டினுடைய பெல்ட்  பீமில் காம்பவுண்ட்சுவரை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சில காண்டிராக்டர்கள் பொறியாளர்கள் வீட்டின் வேலையுடன் காம்பவுண்ட் வேலையும் தமக்கே கிடைக்க வேண்டும் என்று கூட, முதலிலேயே காம்பவ்ண்ட் பில்லரை அஸ்திவாரத்துடன்  இணைத்துக் கட்ட வற்புறுத்துவார்கள். இது தேவையற்றது. 


வீட்டின் அஸ்திவாரம் ஆழம் 5 அடி என்றால், காம்பவுண்டின் அஸ்திவாரம் 2 அடி 3 அடி வரை தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, தங்களுடைய மண்ணின்தன்மைக்கு ஏற்ப காம்பவுண்ட் சுவருக்கு அஸ்திவாரம் அமைத்து தக்க பொறியாளரின் ஆலோசனைப்படி செயல்படுத்துங்கள். 

 



Q: வானுயர்ந்த கட்டிடங்களின் வெளிப்பகுதி முழுவதும் ஏன் கண்ணாடிகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது? வெயிலின் தாக்கத்தால் கண்ணாடிகள் ஏற்கும் அதிக வெப்பத்தை எப்படி சமாளிக்கிறார்கள்? நிறை குறைகள் என்ன?


Answer:

பதில் அளிப்பவர் : சந்திரன், முன்னாள் வங்கி மேல்நிலை அதிகாரி.
1900களில் இருந்தே அமெரிக்காவில் பிரபலமான ஒரு கட்டடக் கலை வடிவம்தான் இந்த steel & glass skyscrapers. 1884இல் முதல் வானளாவிய கட்டடம் வில்லியம் ஜென்னி என்பவரால் அமெரிக்காவில் கட்டப்பட்டது. அப்போது நகரங்களுக்கு மக்கள் அதிக அளவு குடியேறியதில் நகரங்களுக்குத் தேவையாக இருந்தன. இந்த கட்டடங்கள், அலுவலகங்களுக்கும் சரி அபார்ட்மெண்ட்களுக்கும் சரி. ( Centre Rot  என்னும் அதுதான் இப்போது இங்கு நடந்துகொண்டிருக்கிறது!   (அது ஒரு பெரிய டாபிக்!)  அவை அப்போதே வெப்பத்தை தடுத்துத் திருப்பியனுப்பும்  (deflection) முறையிலும், ஏற்றி இறக்கி காற்றை அளவாக உள் வாங்கும் முறையிலும் கிளாஸ் வேண்டிலேஷனுடனும் அமைக்கப் பட்டன. கண்ணாடியின் நோக்கம் அதிக இயற்கை ஒளியை உள்வாங்குதல், மின்சார விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல், வெளியிலுள்ள அழகிய பசேலென்ற காட்சிகளைக் கண்டு கொண்டே வேலை செய்தல், ஆகியவைதான்.

குளிர்சாதன வசதி கார்பன் footprints ஐ அதிகமாக்குவது அதன் மறு பக்கம். நாளாக ஆக அதிகரித்து விட்டது. ஆனால் உயரம் குறைவான கண்ணாடி ஜன்னல்களே அதிகமில்லாத பங்களாக்களிலும் கூடத்தான் ac உபயோகமாகிறது.

இந்த வகை கட்டுமானம் சென்ற இரு நூற்றாண்டுகளாய் உலகெங்கும் பரவியது. உயரம் அதிகமாக ஆக கட்டடங்கள் காங்கிரீட், ஸ்டீல், கண்ணாடி உபயோகித்துக் கட்டினால்தான் அழகு என்றாகி விட்டது. உயரம் குறைவான கட்டடங்களும் அவ்வாறு அழகுக்காக கட்டப்படுகின்றன. பலமான அஸ்திவாரங்களுடன், நில நடுக்கம் தாங்கும் வகையில் கட்டப்படுகின்றன. இவையும் அழகாகத்தான் உள்ளன. டோரோன்டோவிற்குள் நுழையும் வழியில் வெகு தூரம் போகும் வழி இப்படி ஓர் அழகுதான். இது போல் பல இடம். நியூயார்க், சிகாகோவும் பல நகரங்களும் அப்படியே. வாஷிங்டன் dc யில் இவ்வகைக் கட்டடங்கள் அதிகமில்லாமல் பாதுகாக்கிறார்கள்.

 



Q: சிவில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டு விட்டேன். ஆனாலும் கட்டுமானம் தொடர்பான பல வேலைகள் எனக்கு தெரியும். எனவே சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுக்கு சென்று பணி புரிய விருப்பம். கட்டுமான வேலைக்கு வெளிநாடு செல்லலாமா?


Answer:

வரலாம், தாராளமாக வரலாம். உங்களுக்கு மனத்திடம் அதிகம் இருந்து பணம் மட்டும் குறிக்கோளாக பார்ப்பீர்கள் என்றால்?தாராளமாக வரலாம். 
ஏனென்றால், உங்கள் மனக்கோட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் இங்கே பல இடங்களில் உடைபடும். உங்கள் இயல்பான மனநிலையும் உடைபடும். நீங்கள் கட்டிக்கொண்டு வந்த மனக்கோட்டை முதல் நாளிலே உடைபடும். ஆம், தங்கும் இடம். குறைந்தது 300 நபர்கள் தொடங்கி 30,000 நபர்கள் வரை ஒரு விடுதியில் தங்கும் நிலை ஏற்படும். சில விடுதியில் இதற்கும் மேல். 
 
இரண்டடுக்கு கட்டில் வரிசைகள். பெரும்பாலும், உங்களுக்கு மேல் கட்டில் தான் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். சற்று அசந்து உருண்டீர்கள் என்றால்? சுதாரிப்பதற்குள் நீங்கள் தரையில் கிடப்பீர்கள். அதனால் ஏற்படும் வலிகள் உங்களுக்கே. (என் வண்டி அதிக தடவை தடம் புரண்ட அனுபவம்) நீங்கள் உண்ணும் உணவு, சமைத்து சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் செய்த புண்ணியம். பொட்டலம் சாப்பாடு என்றால், வாழ்க வளமுடன்! என்னால் இதைத்தான் சொல்ல முடியும். அக்கொடுமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஏனென்றால் தரம் அப்படி.
 
முதல் நாள் இரவு பத்து மணிக்கு சமைத்த உணவை நாம் மறுநாள் மதியம் உண்ண வேண்டும். சூடாக பொட்டலத்தில் கட்டினால் அது இறுகி அவ்வாறு இருக்கும்.
முதல் நாள் வேலை, உங்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள்(தலைக்கவசம் (helmet) , காலணி (safety shoes) கையுறைகள் (gloves) மூக்கு கண்ணாடி:) (safety goggles)
 மற்றும் உடல்வார் பட்டை (full body harness). ஏதோ போருக்கு தயாராவதை போன்ற உணர்வு ஏற்படும்.
 
ஆனால் உங்களுக்கு கொடுக்கப்படும் பணியோ “ஜங்குவா ஆப்ரேட்டர்”  அதாங்க மண்வெட்டும் வேலை. இங்கு அனைத்து வேலைகளும் மறுப்பின்றி செய்தாக வேண்டும்.
அதிக வேலை நேரம். ஆமாம், நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் கொண்டு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வரை ஞாயிறு தவிர்த்து (8 tஷீ 5) 
மற்ற நாட்களில் காலை எட்டுமணியிலிருந்து இரவு பன்னிரெண்டு மணி வரையில் வேலை நேரம்.
 
காசு வேணும் என்றால்? கூடுதல் நேரம் வேலை பார்த்தாக வேண்டும். இல்லையென்றால் வாங்கிய கடன் கட்டி முடியாது. பின்னர், தங்கும் விடுதிக்கு திரும்பி குளித்து, சமைத்து உண்டு முடித்து விட்டு உறங்க வேண்டும். மீண்டும் காலையில் எழுந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் நிறுவன வாகனத்தில் ஏறிவிட வேண்டும். வண்டி உங்களுக்காக காத்திருக்காது. இங்கு நேரத்தினை சரியாக கடைபிடிக்க வேண்டும். அதிகபட்சம் நாலு மணிநேரம் தூங்கலாம். புதிதாக சேர்ந்தவர்கள் சில குறிப்பிட்ட காலங்கள் வரை உடல்நலம் குறைப்பாட்டை தவிர்த்து, மற்ற காரணங்களுக்கு விடுப்புகள் எடுக்க இயலாது.
 
அனைவருக்கும் வருடா வருடம் ஊதிய உயர்வு இருக்காது. சிலருக்கு நான்கு வருடங்கள் ஆனாலும் ஊதிய உயர்வு கிடைக்காது.
மேலே சொன்ன கடினங்கள், புதிதாக வருபவர் கட்டாயம் அனுபவித்துதான் ஆக வேண்டும்.
 
இங்கே, உங்கள் திறமை காட்ட பல வாய்ப்புகள் உண்டு. நீங்கள் கடின உழைப்பு, திறமை மற்றும் விசுவாசமாக இருந்தால் நிறுவனம் உங்களை அரவணைத்து கொள்ளும்.
அதிக சலுகைகள் கிடைக்கும், கொஞ்சம் படிப்பறிவு இருந்தால், நிறுவனம் உங்களை அந்த தொழில் சார்ந்த குறுகிய கால படிப்புகளை படிக்க வைத்து உங்களை உயர்த்தி விடும்.
உங்கள் திறமை இன்னும் மேம்பட்டால், அந்நாட்டு நிரந்தர குடியுரிமை கிடைக்க நிறுவனம் வழிச் செய்யும். இது போன்று பயனடைந்தவர்கள் மிகச் சொற்பமே.
சிந்தித்து செயல்படுங்கள்.



Q: ஏ.ஏ.சி பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு கட்டலாமா? அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடுமா?
பதில் அளிப்பவர் : பாலச்சந்திரன், தமிழ்நாடு அரசு-இல் நில அளவையர் 2022 முதல் –தற்போது வரை


Answer:

ஏ.ஏ.சி பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு கட்டலாமா? அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடுமா?
 
பதில் அளிப்பவர் : பாலச்சந்திரன்,  தமிழ்நாடு அரசு-இல் நில அளவையர் 2022 முதல் –தற்போது வரை
 
இந்த கேள்வி நீண்ட நாட்களாகவே பலர் நம்மிடம் கேட்ட கேள்விதான். முதலில் பொறியாளராகிய எனக்கே AAC  கற்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை ஏற்படவே இல்லை என்பது உண்மைதான்.ஆனால் உண்மையில் AAC கற்கள் தரத்தில் ..நாம் சாதாரணமாக பயன்படுத்தும் செங்கற்களை விட பலமடங்கு வலிமை உடையது.
 
சென்னை மற்றும் பல மெட்ரோ நகரங்களில் பெரும்பாலான அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்துமே AAC கற்களை கொண்டே கட்டப்படுகின்றன .மேலும் அரபு நாடுகளில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவற்றிலும் இந்த வகை கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன ,அதனால் தரம் மற்றும் நம்பகதன்மையில் AAC கற்கள் மீது நாம் சந்தேகம்கொள்ள தேவையில்லை.
 
மேலும் இந்தவகை கற்கள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் கட்டிடத்தின் வரும் DEAD LOAD எனப்படும் LOAD மிகவும் குறைவாகவே இருக்கும் . 
இதனால் கட்டிடத்தில் BEAM மற்றும் COLUMN போன்றவை டிசைன் செய்யும்போது, அளவுகளில் சற்று சின்னதாவே அமைக்கலாம். மற்றும் கட்டுமான கம்பிக்கும் தேவை குறைவாகவே இருப்பதால் கட்டிடத்தின் செலவு சற்றே குறையும் .
 
இந்த வகை கற்களை பயன்படுத்தி வீடுகட்டும் போது மணலும் சிமெண்டும் பெரும்பாலும் பயன் படுத்தப்படுவதில்லை. அதற்கு பதிலாக பிரத்யோகமாக இதற் கென்றே உள்ள பசையை பயன்படுத்துவதால் நேரமும் குறைவதுடன் கட்டிட செலவுகளும் குறைகின்றது.
 
மேலும் இந்தவகை கற்கள் பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதால் வாங்குவதில் எந்தவித சிரமமும் இருக்காது. மழைக்காலங்களில் செங்கல்லுக்கு ஏற்படும் தட்டுப் பாடு மற்றும் விலையேற்றம் போன்று இந்த வகை கற்களுக்கு ஏற்படுவதில்லை. அதனால் வருடம் முழுவதும் ஒரேசீரான விலை மற்றும் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் கட்டுமான பணிகளுக்கு இவை உகந்ததாக கருதப்படுகின்றது.
 
என்னதான் இந்த AAC கற்களுக்கு பல பிளஸ் பாய்ண்டுகள் இருந்தாலும்,
இதை பயன்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்களும் உள்ளது.Load Bearing Structure எனப்படும் கட்டுமான முறைக்கு இந்த வகை கற்களை பயன்படுத்த முடியாது. மேலும் coefficient of thermal expansion பற்றியோ மற்ற பிற Parameters பற்றியோ நம்பிக்கையான தகவல்களோ ,உறுதியான நேரடி சாட்சியங்களோ இல்லாதிருப்பது இந்த புதிய ரக கற்களை பயன்படுத்துவதில் சற்று தயக்கத்தை ஏற்படுத்துகிறது .
 
கட்டுமானத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு பல புதிய அப்டேட் வந்துகொண்டுதான் இருக்கின்றது. அவற்றில் நடைமுறைக்கு ஏற்ற சிறந்த தொழில்நுப்ட முன்னேற்றங்களை பயன் படுத்திக்கொள்வதே ஒரு நல்ல கட்டுமான பொறியாளரின் கடமையாகும் .



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000