Q: வீடு கட்டுதலில் உள்ள பல்வேறு பணிகளில் எதை முன் செய்வது? எதை பின் செய்வது என்கிற குழப்பம் என்னைப் போன்ற பலரிடம் உண்டு.. சதாரணமாக, ஒரு வீடு கட்டுவதில் அஸ்திவாரம். போர் போடுதல், செப்டிக் டேங்க் கட்டுதல் தொடங்கி பெயிண்டிங் வரை உள்ள கட்டுமானப் பணிகளின் சரியான வரிசை என்ன என்பதைக் கூற முடியுமா? -ஆராதனா சங்கர், அழகுக்கலை நிபுணர், சென்னை
Answer:
அழகுக் கலை நிபுணர் ஒருவர் இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்டுள்ளது எங்களை ஆச்சரியப் படுத்துவதாக உள்ளது.
நீங்கள் மேஸ்திரி மூலமாகத் தொழிலாளர் ஒப்பந்த முறையில் (Labour contract) சொந்தமாக வீடுகட்டுவோர் என ஊகிக்கிறோம். இது ஒரு மோசமான- சங்கடங்களை ஏற்படுத்தும் கட்டுமானமுறையாகும். அத்துடன் கட்டுமானச் செலவை (கடைசியில் கணக்குப்பார்த்தால்) குறைந்தது 20% மிகுதியாக்குவது. எனவே, வேண்டவே வேண்டாம். கூடவே, கூடாது என்று எச்சரிக்கிறோம்.
இப்பொழுது கேட்ட கேள்விக்குரிய பதிலைப் பார்ப்போம்.
வீடு கட்டுதலில் உள்ள பல துணைவேலைகள் ((Sub works)) 100க்கு மேலிருக்கும். அவை. ஒவ்வொன்றையும் இக்கேள்வி-பதில் பகுதியில் வெளியிடமுடியாது. எனினும், சில முக்கியமான துணைவேலைகளை வரிசைப்படுத்தலாம் (according to construction-Technical sequence)
1. மனை சரிப்படுத்தல் - மண்சோதனை செய்தல்-ஆழ்துளைக்கிணறு அமைத்தல்,
2.கட்டட அளவுகளைக் குறித்து மண் வெட்டுவேலை -சாதா 1:5:10 காங்கிரீட்போடல் ,
3. அடித்தள பெட்டி அடைப்பு - கம்பி கட்டிப் பொருத்தல் - M 20/ M 25 தரக் காங்கிரீட் போடல்,
4. தூண்களை உயர்த்தித் தரைமட்ட Grade beam வார்த்தல்.
5. தரைத்தளமட்டம் வரை மண் கொட்டிக் கொட்டிப்படுத்தி 1:5:10 காங்கிரீட் போடல்,
6. இதேசமயத்தில் கீழ்நிலைத்தொட்டி, அழுகுத் தொட்டி அமைத்தல்,
7. தூண்களை ஜன்னல் மட்டம் உயர்த்தி- சன்னல் விட்டம் போடுதல்,
8. தூண்களைக் கூரை கீழ்மட்டம் வரை உயர்த்தி-கூரைவிட்டம் & கூரைப்பலகம் அமைக்கப் பெட்டி அடைப்பு - தாங்கு அமைப்பு-கம்பிகட்டி இருத்தல் இதன்மீது M20/M25 தரக் காங்கிரீட் வார்த்து 14 நாட்கள் நீராற்றல்.
9.பின் தரைத்தளச் சுவர்கள் கட்டி, ஜன்னல் & கதவு நிலைகளைப் பொருத்தல்,
10. தண்ணீர்க் குழாய்கள், மின் குழாய்கள், கழிவறைக் குழாய்கள் பொருதல்,
11. சுவர்களுக்கும் கூரை விதானத்திற்கும் (Ceiling) கலவைப்பூச்சு பூசுதல் ,
12. தரைத்தளத்திற்கு பளிங்கு ஒடுகள் போடல் குளியலறை, கழிவறை ஒடுகள் ஒட்டல்,
13. உள்ளேயும் வெளியேயும் வண்ணப்பூச்சு பூசுதல்,
14. பின்னர்-கடைசியாக சுற்றுச்சுவர் கட்டி, பூசி, வண்ணம் பூசுதல்,
15.வரவேற்பறை, சமையலறை இவற்றில் மரவேலைகள் செய்தல் இப்படி இந்த பட்டியல் நீளும்.
- பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
PH:No:8825479234
Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 35 நான் கட்டும் வீட்டின் செப்டிக் டேங்க் 10 க்கு 6அடி அளவுடையது. இப்போது கூடுதலாக ஒரு கழிவறை வீட்டுக்கு வெளியே (விருந்தினர்க்காக) கட்ட எண்ணம். ஆனால், இடமில்லை. எனவே, செப்டிக் டேங்க் மேலாகவே, கழிவறை கட்டி விடலாமா? அது உகந்ததா? பாதுகாப்பானதா? கழிவறை 3க்கு 3அடி தான் வரும்.
பதில்:
அழுகுத் தொட்டி எனும் தரை கீழ் செப்டிக் டேங்க் மீது கழிவறை கட்டுவது ஒன்றும் தவறில்லை. ஆனால் அதற்குமுன் அந்த அழுகுத் தொட்டியின் மேல் மூடுபலகைம் (Cover slab) முறையாக வடிவமைக்கப்பட்டு-போதுமான கனம், தேவையான உறுதியூட்டிகள், காங்கிரீட்தரம் (குறைந்தது M20/ M25 Grade) உடையவையாக இருக்க வேண்டும்.
இரண்டாவது ஒரு கழிவறையின் அளவுகள் 5’0'’X6’0'’(உட்பக்கம் 3’6'’X 4’6'’) உடையதாக இருப்பதே நல்லது. நீங்கள் சொல்வதுபோல் 3’0'’X 3’0’’ என்றால் உள்ளே ஒருவர் போய்வரவே கடினம். இதில் எல்லாம் கஞ்சத்தனம் காட்டாமல் - கழிவறை என்றாலும் வசதியாக இருக்குமாறு கட்டுங்கள் திரு. பசுபதி அவர்களே.
- பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
PH:No:8825479234
Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 36 சேலம் அருகே 20 தனி வீடுகள் கொண்ட தொடர் வீடுகள் கட்ட உள்ளேன். செயற்கை மணல் பூச்சு வேலைக்கு நல்லது என்கிறார்கள். அதே சமயம் ஜிப்சம் பிளாஸ்டரும் பூச்சு வேலைக்கு நல்லது என்கிறார்கள் இரண்டில் எதை நான் தேர்வு செய்வது? - ஆர்.ஆர். கான்ட்ராக்டர், சாரதி, செந்திட்டு
• பூச்சு வேலைகளுக்கு ‘‘பூச்சு மணல்’’ எனும் செயற்கை மணலைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
• செயற்கை மணலை உட்சுவர் பூச்சு வேலை களுக்கும் வெளிச்சுவர் பூச்சு வேலைகளுக்கும் அச்சமின்றி பயன்படுத்தலாம்.
• ஆனால் ஜிப்சம் பிளாஸ்டர் (Level Plaster போன்றவை) உட்சுவர்கள் மற்றும் கூரை உள்விதானம் (ceiling surfaces) இவற்றிற்கு மட்டுமே ஏற்றது.
• வெளிச் சுவர்பூச்சு வேலைகளுக்கு ஜிப்சம் பிளாஸ்டரைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படித்தினால் மழைநீரில் ஊறி வலுஇழந்து பெயர்ந்து விழுந்துவிடும்.
பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
For Subscribe pl call 8825479234
Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 37 அஸ்திவாரம் மற்றும் செப்டிக் டேங்க் தோண்டும் போது கிடைக்கிற மண்ணையே பேஸ் மட்டம் நிரப்புவதற்கு பயன்படுத்தலாம் என்கிறார்களே அது சரியா? அது பலமுள்ளதாக இருக்குமா? - முருகேசன், குன்றத்தூர்.’
முதலில் நீங்கள் வீடுகட்டுமிடத்தில் - அடி மனைத்தளத்தில் கிடைக்கும் மண்வகை எது - செந்சரளையா, பருமணலா, நொய் மணலா, கெட்டிக் களிமண்ணா, மென் களிமண்ணா என்பது தெளிவாக தெரிவிக்கவில்லை .
குன்றத்தூர் என்றால் அடையாறு ஒட்டியுள்ள பகுதியில் மணல் கிடைக்கலாம். எனவே செந்சரளை மண், பருமணல் போன்றவற்றை அடித்தள வெட்டு மண்ணைக் கொண்டு நிரப்பலாம்.
நொய்மணல், களிமண் / குறிப்பாக, மென் களிமண்ணாக இருந்தால் கண்டிப்பாக அவற்றை நிரப்பு மண்ணாகப் பயன்படுத்தக் கூடாது.
மாற்றாக கருங்கல் உடை தூளைக் (Quarry Dust/Stone Crusher Dust)) கொட்டி நிரப்புவது சிறப்பானது; செலவும் குறைவு. மேலும் ,
கரியான் எதிர்ப்பு தருவதாகவும் இது அமையும்.
பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் ,
பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
www.buildersline.in
For Subscribe pl call 8825479234
Q: கட்டடத்துறை கேள்வி பதில்கள் - 25 மாதவரம் அடுத்த மாத்தூரில் எனது புராஜெக்ட் செய்ய உள்ளேன். ஜி+2 என்ற அளவில் 8 வீடுகள் இதில் அமைய உள்ளன. அடிக்கடி வெள்ளம் சூழும் பகுதியில் அதற்கேற்ற வகையில் சிறப்பு அடித்தளம் அமைக்க வேண்டும் என்கிறார்களே. அதைப் பற்றி கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்.... - ராஜசேகர், பிரிமீயம் பில்டர்ஸ்
உங்கள் மாத்தூரில் கட்டப்போகும் அடிமனையின் கீழ்மண் எந்தவகை என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. களிமண் வகையாக இருந்தால்..
அடிபெருத்த குத்துதூண்கள்- இரண்டு, மூன்று, நான்கிணைந்தவை+ மேல் தொப்பி ( (Under reamed piles -2,3, or 4 groups with top pile cap) உடைய 4.50 மீட்டர் ஆழம் கொண்டவைகளை மிக எளிதாக அமைக்கலாம். மிகவும் பாதுகாப்பானவை.
களிமண் அல்லாத பிறவகை மண்ணாக (மணல், சுக்காம் பாறை போன்றா கூடுதல் தாங்குதிறன் கொண்டவை) இருந்தால்..உள்ள மண்ணை 450 மிமீ/600 மி.மீ ஆழத்திற்கு மேம்படுத்தி - அதன்மீது தனி பரவல் அடித்தளங் களை ((Isolated footings) அமைக்கலாம்.
• இரண்டு நிகழ்வுகளிலும் கட்டப்போகும் வீட்டின் தரைத் தளமட்டம் அருகில் உள்ள சாலை மட்டத்திற்கு மேலே 1.20 மீட்டர்/1.50 மீட்டர் (4 அடி/5 அடி) வரை உயரமுடையதாக அமைக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஒரு நல்ல கட்டுமானப் பொறியாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பதிலளித்தவர் பொறி அ வீரப்பன் , பில்டர்ஸ்லைன் இதழிலிருந்து...
PH:No:8825479234
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|