MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: மதிப்பிற்குரிய அ.வீரப்பன் அவர்களுக்கு என் பணிவான வணக்கம். எங்கள் பகுதியில் உள்ள நூலகத்தில் வரும் பில்டர்ஸ்லைன் இதழின் தீவிர வாசிப்பாளன் நான். நன் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரம் திருவத்திபுரம் நகராட்சியில் “கிராம நத்தம்’ சார்ந்த நிலப்பரப்பில் சுமார் 8 ச.அடி அகலம் 19 ச.அடி நீளம் ஆக மொத்தம் 152 ச.அடி மட்டுமே உள்ள குடிசையில் வாழ்ந்து வருகிறேன். நான் வாழும் பகுதி மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள ( அரசாங்க வழிகாட்டு மதிப்பீட்டின் படி - COMMERCIAL CALASS - 1) பகுதி ஆகும். மேலும் இந்த குறுகிய அளவு உள்ள இடத்தில் இரண்டு அடுக்கு வீடு கட்டலாமா? நகராட்சி குடியிருப்பு விதியின்படி வீடு கட்டலாமா? நான் நகர வரி முறையாக கட்டி வருகிறேன். நான் சுமார் 6 வருடங்களாக ‘பெயிண்டர்’ தொழில் செய்து வரும் கூலித் தொழிலாளி. கட்டட வல்லுநர்களின் ஆலோசனைகளை வழங்கி உதவிடுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு உங்கள் பதிலுரைக்கு காத்திருக்கிறேன். - இரா. வாசுதேவன், பெயிண்டர்,செய்யாறு.


Answer:

உங்கள் கேள்வியைப்  படித்து எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது. நகராட்சிக்குத் தொடர்ந்து வரிகட்டினாலும் விதிகளை மீறிக் கட்டக் கூடாது. ஒப்புதல் கிடைப் பதில் சங்கடங்கள் ஏற்படும்.  8’0'’(Street - row type house)  இரண்டு சுவர்களின் கனம் 1’6’’ போனால், மீதி இருப்பது 6’6’’ அகலம்  மட்டுமே. இதில் பெட்டிக் கடை வைக்கலாம். புழங்கும் வீடு எப்படிக் கட்டுவீர்கள் என்று தெரியவில்லை, நகராட்சி கட்டு
மான விதிகளின் படி 1000 ச.அடிக்கு (95 சதுர மீட்டர்) குறைவாக பரப்புள்ள நிலத்தில்  
4+1 தளம் கட்ட மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் உங்கள்  மனைக்கு  ஒப்புதல் இருந்தால்  மட்டுமே.


நாங்கள் வீடு கட்டி 14 ஆண்டுகள் ஆகி விட்டன. மொட்டை மாடியில் (950 ச.அடி) விசேசே  வெதரிங் கோர்ஸ் ஏதும் செய்ய வில்லை. அப்போது என்னிடம் பணமுமில்லை. இப்போது வெதரிங் கோர்ஸ் மட்டும் செய்ய ஆசைப்படுகிறேன். பாரம்பரிய முறையில் வெதரிங் கோர்ஸ் செய்யட்டுமா? அல்லது வெதரிங் கோர்ஸ் ஒடுகள் கொண்டு செய்யட்டுமா? பழைய வீடுகளுக்கு நீங்கள் எந்த முறையை சிபாரிசு செய்கிறீர்கள்.

புதிதாக வெதரிங் கோர்ஸ் - அதன்மேலே ஒடுகள் பதித்திட Brick - Jelly, Lime ,Concrete Combination Lime Mortar 1 part cement: 3 Part lime: 3 Parts sand - இவற்றுடன் உடைத்த செங்கற்களைக்கலந்து போதுமான வாட்டம் கொடுத்து - மேல் தளம் அமைத்திடுங்கள் அதன் மீது சாதாரண மொசைக் ஒடுகளை - 1:2:6 Combination Mortar bed -  (நீர்த் தடுப்பான் கலந்தது) -12 மி மீ கனத்தில் பரவி - அதன் மீது மொசசைக் ஓடுகளைப் போடுங்கள். காப்பாக - உறுதியோடு இருக்கும். வெறும் வெதரிங்கோர்ஸ் மட்டும் பரப்பி - மேலே ஒடுகள் பதிக்காவிட்டால் - தளம் இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே பாழடைந்து காங்கிரீட் கூரைப்பலகத்திற்குச் சேதமுண்டாக்கும் அரைக்கிணறு தாண்டும் வேலையை விடுங்கள்.

 



Q: சார், நான் தரை தளத்தில், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு லேத் கம்பெனியை வாடகைக்கு விட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அக்கம் பக்கம் காலி மனைகளாக இருந்தன. பிரச்சனையில்லை. தற்போது ஓரிரு ஆண்டுகளில் நிறைய வீடுகள் வந்து விட்டன. அக்கம் பக்க வீடுகளில் வசிப்பவர்கள் இந்த கம்பெனியால் தங்கள் வீடுகளால் கடுமையான அதிர்வுகள் ஏற்படுபவதாகவும், தங்கள் கட்டடங்களுக்கு அதனால் ஆபத்து ஏற்படும் என்றும் கூறுகிறார்கள். லேத் கம்பெனியை காலி செய்யச் சொன்னேன். அவர்கள் மறுக்கிறார்கள். எனக்கு தெரிய வேண்டியது. 1. இயந்திரத்தின் தொடர் அதிர்வுகளால், பிற கட்டடங்களுக்கும், நமது கட்டடத்திற்கும் உண்மையில் ஆபத்து உண்டா? 2. ஒலி அலைகளை அளவிடுவது போல், அதிர்வு அலைகளை அளவிட ஏதேனும் அளவை உண்டா? 3. எத்தனை அதிர்வு எண்கள் வரை நாம் அனுமதிக்கலாம்? நீங்கள் சொல்லும் பதிலை இரு தரப்பினரிடமும் காட்டி ஒரு தீர்வு காண முற்படுவேன். - * நாகப்பன், பத்திரிகை ஆசிரியர், செங்குன்றம்.


Answer:

லேத் கம்பனியில் என்னவகையான இயந்திரங்களைப் பயன் படுத்துகிறார்கள்? அவை மிகுதியான சத்தத்தையும் அதிர்வுகளையும் ஏற்படுத் துகின்றனவா? அப்படியயனில் சுற்றியிருக்கும் வீடுகளில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவிப்பது இயற்கையே.
லேத் கம்பனியில் தரும் வாடகை-பெரிய தொகையயனில் கீழே குறிப்பிடும் மாற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.

 

1. தரைத்தளத்தில் லேத் பட்டறையைச் சுற்றிலும் ஓரடி இடம் விட்டு 2’0'’யீ 5’0'’ (ஆழம்) அளவுள்ள குழிவெட்டி அதனைப் பருமணல் கொட்டி நிரப்பினால் - பக்கத்து வீடுகளுக்கு நில அதிர்வுகள் போகாது, மிகுதியாகப் பரவாது.
 

2. ஒலி மாசு (சத்தம்) வைத் தடுக்க,  தரைத்தள பக்கவாட்டுச் சுவர் உயரத்திற்கு ஒலியினைத் தடுக்கும் Sound insulation Board / Panals கொண்டு சுற்றி அடைக்கலாம்.
 

3. இது செய்யாது போனால், நில அதிர்வுகளால் - பக்கத்துக் கட்டடங்களின் அடித்தளம் பாதிக்கப்பட மிகுதியான வாய்ப்புகள் உள்ளன.
 

4. ஒலி அலைகளை / நிலஅதிர்வுகளை அளவிடச் செய்யப்படும் சோதனைகள் செலவு பிடிப்பவை. இவை ஆய்விற்கு மட்டுமே பயன்படுபவை.
 

5. இவற்றைக் காட்டினால் - பக்கத்து வீடுகளில் குடியிருப்போர் இதையயல்லாம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். 
(என் வீட்டுத் தென்னைமரம் - பக்கத்து வீட்டை மேலே எட்டிப் பார்த்தமையால் அதை என் வீட்டுப்பக்கம் எஃகுக் கயிறுகளைக் கொண்டு கட்டி இழுத்திட 2005 ஆம் ஆண்டில் ரூ 5000 /- செலவழித்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது)

 



Q: நாங்கள் ஒரு தளம் கொண்ட வீட்டை 700 ச. அடியில் சிக்கனமாகக் கட்டுகிறோம். வீட்டு தாய்ச்சுவர் தவிர, அறை பிரிப்புச் சுவர்களுக்கு செங்கல் சுவர் வேண்டாம். ஜிப்சம் அல்லது பார்டிகிள் போர்ட் பயன்படுத்தினால் செலவு குறையும் என்கிறேன் நான். (சுவர் கட்டு செலவு, சிமெண்ட் கலவை, பட்டி, கூலி) என் வீட்டில் கேட்க மாட்டேன்கிறார்கள். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.


-ராஜன், ஓய்வு பெற்ற கப்பல்  ஊழியர். நெசப்பாக்கம். 


Answer:

நீங்கள் குடியிருக்க - புழங்க வீடுகட்டு கிறீர்களா? அல்லது பொருட்காட்சி அரங்கு (Exhibition stall) அல்லது தற்காலிக நாடக மேடை அமைக்கப் போகிறீர்களா?
1. ஜிப்சம் அல்லது பார்டிகிள் போர்டு உடைய உள்ளறைகள் புழங்குவதற்கும் பாதுகாப்பிற்கும் குடியிருக்கும் வீட்டிற்கு ஏற்றவை அல்ல.

2. மேலும், நம் மக்களின் (உங்கள் குடும்பத்தையும் சேர்த்தே) பாரம்பரிய வாழ்க்கைமுறைகள், மனநிலை, நிறைவு எல்லாம் இன்னும் ஒரு சிறிதும் மாறவில்லை, எனவே சிக்கனம் என்ற பெயரில் வீட்டில் வசிப்போரின் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம்.

3. இதற்குப் பதிலாக 4'’ கனமுள்ள Porotherms முன்வார்த்த கற்களைப் பிரிப்புச் சுவர்களுக்குப் பயன்படுத்திப் பூசலாம்.


 



Q: வீடு கட்டும்போது ஆங்காங்கே கனமான சுவர்களுக்கு பதிலாக, கிரில், ஜன்னல்கள் வைத்தால் கட்டுமானச் செலவு குறையும் என்பது சரியா? அப்படி செய்யலாமா? - ரம்யா,கல்லூரி மாணவி, ஆவடி


Answer:

 

நீங்கள் தெரிவித்துள்ள கருத்துரை யார் சொன்னது? கட்டிட மேஸ்திரியா (அ) கட்டடம் கட்டுனரா? இல்லை உங்கள் கல்லூரிப் பேராசிரியரா? எதில் எந்தவகையான கட்டுமானப் பொருளான கிரில் மற்றும் சன்னல்களை வைக்கப் போகிறீர்கள் எப்படி இருந்தாலும் கனமான சுவர்களுக்குப் பதிலாக கிரில் மற்றும் சன்னல்களை அமைத்தால் கூடுதலாகவே செலவு ஆகும் எ.கா 5’0'’ அகலமும் 4’6'’ உயரமும் உள்ள ஒரு சன்னல் அமைக்க கீழ்கண்ட செலவாகும்.

 

UPVC - சன்னல் - யூவி. 15.000/-
Aluminium Glassed சன்னல் மற்றும் கிரில் வைத்தால் ரூபாய் 4000 முதல் ரூ 5000 வரை ஆகும்.

 

பாதியாக செங்கல் சுவரை (9'’) கட்டினால், சுவர் பூச்சு வேலை + வண்ணப்புச்சு எல்லாம் சேர்த்து ரூ 3200 மட்டுமே. 
எனினும் ஒரு கட்டிடத்தில் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் வர கிரில் வைத்து சன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்களை பொருத்த வேண்டியது கட்டாயம்.

பதிலளித்தவர் : பொறி அ. வீரப்பன் 

<body id="cke_pastebin" style="position: absolute; top: -10px; width: 1px; height: 180px; overflow: hidden; margin: 0px; padding: 0px; left: -1000px;">

நீங்கள் தெரிவித்துள்ள கருத்துரை யார் சொன்னது? கட்டிட மேஸ்திரியா (அ) கட்டடம் கட்டுனரா? இல்லை உங்கள் கல்லூரிப் பேராசிரியரா? எதில் எந்தவகையான கட்டுமானப் பொருளான கிரில் மற்றும் சன்னல்களை வைக்கப் போகிறீர்கள் எப்படி இருந்தாலும் கனமான சுவர்களுக்குப் பதிலாக கிரில் மற்றும் சன்னல்களை அமைத்தால் கூடுதலாகவே செலவு ஆகும் எ.கா 5’0'’ அகலமும் 4’6'’ உயரமும் உள்ள ஒரு சன்னல் அமைக்க கீழ்கண்ட செலவாகும்.

 

UPVC - சன்னல் - யூவி. 15.000/-
Aluminium Glassed சன்னல் மற்றும் கிரில் வைத்தால் ரூபாய் 4000 முதல் ரூ 5000 வரை ஆகும்.

 

பாதியாக செங்கல் சுவரை (9'’) கட்டினால், சுவர் பூச்சு வேலை + வண்ணப்புச்சு எல்லாம் சேர்த்து ரூ 3200 மட்டுமே. 
எனினும் ஒரு கட்டிடத்தில் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் வர கிரில் வைத்து சன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்களை பொருத்த வேண்டியது கட்டாயம்.

பதிலளித்தவர் : பொறி அ. வீரப்பன் 

</body>



Q: நாங்கள் சென்னை கொளத்தூரில் புதிதாக ஃப்ளாட் வாங்க இருக்கிறோம்.சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து விட்டோம். கட்டுமானத்தின் தரத்தினை எப்படி சரிபார்ப்பது? கட்டுமானத்தின் தரத்தினை நாங்கள் எப்படி சரிபார்ப்பது? ( கான்கிரீட்டின் அடர்த்தி, பில்லர்களின் அளவு,சென்ட்ரிங் வேலைகளின் தரம் போன்றவை) - ம.அ.வரதராஜன், வில்லிவாக்கம்


Answer:

கட்டுமான விதிகளின்படி கட்டப்பட்ட கட்டட த்தின் (Flatted Apartments) - கட்டுநர்/விற்பவர் - நகராட்சிக்கு/அல்லது நகர மற்றும் ஊரகத்திட்ட இயக்குநருக்கு (Diector of Town and country planing) ஒப்புதல் பெற அளிக்கப்பட்ட வரைபடங்கள், வடிமைப்புப் பொறியாளரிடமிருந்து பெற்ற கட்டுமான வரைபடங்கள் (Struchural brawings detailing foundation systems columns, Beans & stals etc) இவற்றை வீடு வாங்குபட்ருக்குத் தரவேண்டும், பல கட்டுநர்கள் இவற்றைத் தருவதேஇல்லை. கேட்டு வாங்குங்கள் (விலை கொடுத்தாவது)கட்டப்பட்ட கட்டடத்தின் தரம், வலிமை, நீடித்து நிற்கும் உறுதி இவற்றைப்பார்த்தறிய திறமையும் பட்டறிவும் கொண்ட தகுதியுடைய பொறியாளர் மூலமாகச் சோதிக்கலாம்.

 

பதிலளித்தவர், பொறி அ.வீரப்பன்
- From Builders line Monthly 
To subscribe pl call : 88254 79234
www.buildersline.in



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000