MEMBER LOGIN

User Name :
Password :
Forgot Password        New Registration

Join as Premium User

உங்கள் கேள்விக்கான பதில்கள் உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Q: அய்யா வணக்கம் திருவளூரில் மேல் நல்லாட்டூரில் ஜி+2 வீடு கட்ட இருக்கிறேன். 11 மீ உயரம் வரக்கூடும். கட்டடம் கட்டும்போதே இங்கே செல் டவர் அமைக்க என்னை அணுகி இருக்கிறார்கள் . செல் டவர்கள் தரக்கூடிய அதிர்வு, எடை காரணமாக இப்பகுதியில் யாரும் டவர்களை அமைக்கவிடவில்லை. ஒருவேளை செல்டவர் அமைப்பதற்கான கட்டட வடிவமைப்பு, அடித்தளம் ஆகியவற்றை அமைத்துக்கொண்டால் செல்டவர் பொருத்த விடலாம் அல்லவா? மாதம் 30 ஆயிரம் வாடகை வரக் கூடிய சூழல் இருப்பதால் கேட்கிறேன்.


Answer:

உங்களுடைய  புதிய வீட்டுக் கட்டடத்தின் மீது (11.00 மீட்டர்க்கு மேலே செல் டவர் அமைக்க ஒப்புதல் தராதீர்கள். செல் டவரால் ஏற்படும் அதிர்வுகளினாலும் புயல் காலங்களில் பலமாக 
காற்று வீசுவதானாலும் செல் டவர் பொருத்தியக் கட்டடங்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மாதம் ரூ. 30,000க்கு ஆசைப்பட்டு ரூ. 50 இலட்சம் செலவழித்துக் கட்டிய வீடு சேதமடைவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள். வீடுகளின் மொட்டை மாடியில் இப்படிப்பட்ட செல் டவர்களை அமைப்பது பாதுகாப்புடையதன்று.



Q: சார்! கேரளாவில் இடிக்கப்பட்ட நான்கு கட்டுமானங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது வட சென்னையில் தண்டையார் பேட்டையில் ஒரு 27 மாடி அடுக்கு மாடி குடியிருப்பிற்கு தடை கேட்டு ஒருவர் நீதி மன்றம் போயிருக்கிறார். என் கேள்வி என்னவென்றால் 1. சிஎம்டிஏ ஓகே என்றால் கடலோர ஒழுங்கு முறை ஆணையம் தடை சொல்கிறது. அது அனுமதி அளித்தால் பசுமை தீர்ப்பாயம் தடை விதிக்கிறது. ஒரு சாதாரண நுகர்வோர் இது தெரியாமல் குறிப்பிட்ட கட்டுமான திட்டத்தில் வீட்டை பதிவு செய்து அல்லாடுவதை ஏன் அரசு இயந்திரங்கள் உணர்வதில்லை? அந்த இழப்பீட்டை யார் தருவது? 2. சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டுமான திட்டங்களுக்கும் கேரளா போன்று முடிவு கட்டப்படுமா?. 3. நீர் நிலை அருகே கட்டப்படக் கூடிய கட்டுமான திட்டங் களுக்கான அடிப்படை விதிகள் என்ன?


Answer:

கடற்கரை ஓரங்களில் (Coastal Regulation Zone) கட்டுமானங்களைச் செய்வதற்கு தனிப்பட்ட சிறப்பு விதிகள் இருக்கின்றன. 
Tamilandu Combineed Development & Building Rules 2019-ல் நீர் நிலைக்கு அருகில் கட்டக்கூடிய கட்டுமானம் திட்டங்களுக்கான விதிமுறைகள் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனவே ஒரு நுகர்வோர் ரூ. 50 லட்சம் / ரூ 100 லட்சம் வரை தம் பணத்தைக் கொட்டி ஒரு கட்டுமானத்தை வாங்குவதற்கு முன்பு இந்த விதிமுறைகள் எல்லம் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். 
அதற்குரிய அக்கறையையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தகவல் தொடர்பு/இணைய வசதிகள் மிகுதியாக உள்ள இந்த காலத்தில் இரு ஒரு சாதாரண நுகர்வோர், இது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் தவறு நடந்தால் அரசோ இல்லை கட்டுநரோ இழப்பீடு ஏதும் தரமாட்டார்கள். இதற்கு சென்னை மவுலிவாக்கத்தில் இடிக்கப்பட்ட கட்டடங்களே சிறந்த எடுத்துக்காட்டாகும். 
திரு. நகுலன் குமாரசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராக இருப்பதால் இதற்குரிய தகவல்களை ஒரு வாரத்தில் திரட்டலாம். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கட்டடக் கலைஞர் மற்றும் கட்டுநரைப் பார்த்துத் தகவல் தெரிந்து கொள்ளுங்கள்.

 



Q: வீரப்பன் அவர்களே! ஒரு இதழில் நீங்கள் “”கட்டடக் கலைஞர் என்பவர் அவர் வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். கட்டடப் பொருட்களின் தரம், பிராண்டு, கட்டுமான வடிவமைப்பு இவற்றிலெல்லொம் தலையிடக் கூடாது’’ என பொத்தாம் பொதுவாக கருத்து தெரிவித்துள்ளீர்கள். அதற்கான காரணங்களைக் கூட நீங்கள் அந்தப் பகுதியில் சொல்லவில்லை. உண்மையில் இதை விட ஒரு வேடிக்கையான பதிலில்லை. கட்டுமான வடிவமைப்பு பற்றி ஆர்க்கிடெக்டுகளாகிய நாங்கள் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்படுவது? பிறகு ஏன் எங்களுக்கு எழிற்கலைஞர் என்னும் பட்டம்? எந்த நிறுவனம் சரியான நிறுவனம்? எது நல்ல பிராண்ட்? எது சிறந்த கட்டுமானப்பொருள் என நாங்கள் கூறக்கூடாதா? இதென்ன விபரீதம்? ஆர்க்கிடெக்டுகளாகிய நாங்கள் சொல்வதைக் கேளாமல், கமிஷன் பெற்று சில பொறியாளர்கள் தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்வது நீங்கள் அறியாததா? கட்டுமான திட்டத்தை வடிவமைப்பது நாங்கள். அதை நிறைவேற்றுவது தான் பொறியாளர்கள் வேலை. ஆர்க்கிடெக்டுகளும் பொறியாளர்களும் இரு தண்டவாளங்கள் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.


Answer:

திரு. பாஸ்கர் அவர்களே! நீங்கள் ஒரு கட்டடக் கலைஞர் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. தாங்கள் 5 ஆண்டுகள் B.Arch பட்டப்படிப்பு தங்களுக்கு கட்டு
மானங்களைப் பற்றி  என்னென்ன பாடங்களைப் படித்தீர்கள்? கட்டுமான வடிவமைப்புப் பற்றி  சில தகவல்களைப் படித்ததானாலேயே நீங்கள் கட்டிடப் பொருட்களின் தரம் மற்றும் கட்டுமான வடிவமைப்பு இவற்றிலெல்லாம் கண்டிப்பாக தலையிடக்கூடாது. 

இதற்கு என்று M.E (Structural Engineering, M.E (Costruction Management) படித்து பட்டம் பெற்ற பொறியார்களின் வேலை இது. நீங்கள் என்ன படித்தீர்களோ, பயிற்சி பெற்றீர்களோ, அவற்றில் 
மட்டுமே நீங்கள் தலையிட வேண்டும். அண்மையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட amilnadu Combined Development & Building Rules என்ற அரசாணையில் (Part - V, Annex - XIII Registration of Professionals) என்ற பகுதியில் கட்டடக் கலைஞருக்கும், வடிவமைப்புப் பொறியாளருக்கும் தரப்பட்ட வேலைகள் மற்றும் பொறுப்புகள் இவற்றை நன்றாகப் படியுங்கள். 

இவ்விதிகளின்படி B.Arch தகுதி பெற்ற கட்டட கலைஞர்கள்  (RA) வடிவமைப்புப் பொறியாளர் (RSE - Grade I & Grade II) மற்றும் கட்டுமானப் பொறியாளர் (RCE) ஆகப் பதிவு செய்யவோ/ தொழில் செய்யவோ முடியாது. கூடாது. கட்டுமான வடிவமைப்புப் பற்றி மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் தெரியாத பல கட்டடக் கலைஞர்கள் கட்டட மேலாண்மை (Building Construction 
Management) தமிழ்நாட்டில் பார்ப்பதாலேயே கட்டடக் கலைஞர்களுக்கு கட்டுமான வடிவமைப்பு தெரியும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

இது விபரீதம். வரும் காலங்களில் இவற்றிற்கான தெளிவான புரிதல் மற்றும் தெரிதலும் ஏற்படும் என்று நம்பலாம். சில கட்டுமானப் பொறியாளர்கள் தரமற்ற 
பொருட்களை வாங்குகிறார்கள் என்றால் அவர்களும் தண்டிக்கப்படுவர்களே. கட்டடக் கலைஞர் பலரும் கட்டுமானப் பொறியாளர் சிலரும் விதியை மீறி நடந்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. 

இதற்கெனவே எங்களுடைய கட்டுமான பொறியாளர் பிப்ரவரி 2020 ல் ஆசிரியர் உரையாக எழுதப்பட்ட விதிமீறல் கட்டப்பட்ட கட்டிடங்கள் கண்டிப்பாக இடிக்கப்பட வேண்டும். கட்டுநரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் எழுதிய கட்டுரையை படித்துப் பாருங்கள். அரசாங்கமும் இது தொடர்பான  தொழில்முறை நிறுவனங்களும் தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். என்னுடைய பதிலில் கட்டடக்கலைஞரும் வடிவமைப்புப் பொறியாளரும் அவர்களுக்கென்று குறிப்பிடப்பட்ட வேலைகளில் மாத்திரமே தலையிட வேண்டும். ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றே தெரிவித்திருக்கிறேன். 

எனவே, ஜனவரி 2020 பில்டர்ஸ்லைன் - நான் தெரிவித்த பகுதியை மீண்டும் ஒருமுறை படிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ள Engineers Bill / Engineers Act  செயல்படுத்தப்படும் போது இதைப்பற்
றிய தெளிவுரைகள் வெளியிடப்படும்; செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன். (Also refer, 4-main differences between Civil engineering & Architectural engineering என்பதை Google இணையதளத்தில் தேடிப் படியுங்கள் தெளிவு கிடைக்கும்.



Q: லெஜன்ட் வீரப்பன் ஐயா, பிரிகேஸ்ட் உறுப்புகளை சேதமில்லாமல் பரிசோதிப்பது, தரமறிவது குறித்து நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அருமை. நான் ஒரு நடுத்தர முதலீட்டில் பிரிகேஸ்ட் தொழிற்சாலை துவங்க இருக்கிறேன் (வேலூரில்) இது தொடர்பாக மேலதிக விவரங்களை ஆலோசனைகளைப் பெற நான் யாரை அணுக வேண்டும். பிரிகேஸ்ட் தொழிலகத்தின் அடிப்படைக் கூறுகள் என்ன?


Answer:

முன் வார்த்த காங்கிரீட் உறுப்புக்களின் தொழிற்சாலை தொடங்குவதற்கு சென்னையிலுள்ள MSME (Ministry of Micro, Small & Medium Enterprise) மற்றும் சென்னை தரமணியிலுள்ள SCIR - SERC (Structural Engineering Research Centre) இதனை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
அத்துடன் தற்போது முன் வார்த்த காங்கிரீட் உறுப்புகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று என்னென்ன வசதிகள் அந்த தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை நேரில் பார்த்து அறியுங்கள்.
இத்தகைய தொழிற்சாலைகள் அமைக்க நிறைந்த பரப்பளவு கொண்ட மனை, உட்கட்டமைப்பு, தானியங்கி எந்திரங்கள் கிரேன் முதலிய தொழிலகத்திலிருந்து உற்பத்திச் செய்த உறுப்புகளை வெளியே எடுத்துச் செல்ல போக்குவரத்து வசதிகள் முதலியன வேண்டும். தற்போது பெரிய அளவில் மெட்ரோ ரயில், அறிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) காங்கிரீட் பாலங்கள். பன் மாடி குடியிருப்புகள். இவற்றிற்கு முன் வார்த்த காங்கிரிட் உறுப்புக்கள் தேவைப்படுகிறது. வரும் 02.03.2020 ல் CSIR - SERC - Workshop on Precast Concrete Light Weight, Large EPS Panels for Mass Housing என்ற பயிற்சிப்பட்டறை இலவசமாக SERC நடத்துகிறது. அதில் கலந்து கொள்ளுங்கள்.
தொடர்புக்கு - email : prabhakar@serc.res.in.  (M) : 9444158434 - E : Kandhan@serc.res.in.  (M) : 979006442 
தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன் உங்களின் வேலூர் பகுதியில் முன் வார்த்த காங்கிரீட் உறுப்புகளைப் பயன்படுத்தும் கட்டுமானத் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக அவசியம்.



Q: சார் ஏஏசி கற்களை பயன்படுத்தாதீர்கள் என சொல்லும் நீங்கள் அதன் அமுக்க தகவு குறைவு எனக் கூறுகிறீர்கள். மேற்பூச்சு செய்தால் நிற்காது என்கிறீர்கள். விலை அதிகமான ஏஏசி கற்கள் சிறந்த கட்டுமானக் கற்கள் இல்லை எனவும் தொடர்ந்து வலிய பிரச்சாரம் செய்கிறீர்கள். A.) ஏஏசி கற்களுக்கு தாங்குதிறன் குறைவு என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், சுவர் தாங்கு கட்டுமானங்கள் வகைக்கு தான் தாங்கு திறன் பற்றி கவலைப்பட வேண்டும்.. பிரெம்ட் ஸ்ட்ரக்சர் கட்டுமானங்க்களுக்கு அந்த தேவை இல்லையே? B). மேற்பூச்சு என்று பார்த்தால் கலவையில் ஒரு சில ஆட்மிக்சர்களை சேர்த்தால் மேற்பூச்சு உறுதியாக நிற்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அது தவிர ஜிப்சம் மேற்பூச்சுக்கு ஏஏசி சுவர் மிகவும் ஏற்றது. அது தவிர, வால் டைல்கள்..,வால் மார்பிள் கற்கள் பொருத்தும் போது வழக்கமான கலவை மேற்பூச்சு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை C) விலை அதிகமானது என ஏஏசி கல்லை குறை கூறும் நீங்கள் போரோதெர்ம் கற்களை மட்டும் சிபாரிசு செய்கிறிர்கள்.. களிமண்ணை எடுத்து சுற்று சூழலை கெடுக்கும் விலை அதிகமான போரோதெர்ம் கற்களை விட ஏஏசி கற்கள் மிகவும் சிறந்தது. மேலும் இது கட்டட எடையைக் குறைக்கிறது.. ஏஏசி கற்கள் ஒலி தடுப்பு, தீத்தடுப்பு குணநலன் மிக்கவை. இது ஏஏசி கற்கள் பற்றிய என் பார்வை அவ்வளவு தான்.. - பொறி.ஆர். ஜி. குமார்.. கோவை


Answer:

அன்புள்ள பொறிஞர் குமார் அவர்களே. AAC கட்டுக் கற்களைக் கட்டுமானத்தில் பயன்படுத்துவதால் ஏற்படும் குறைபாடுகளை பல நிகழ்வுகளில் பட்டியலிட்டுள்ளேன். (விளக்கம் வேண்டுவோர் நாங்கள் வெளியிடும் கட்டுமானப் பொறியாளர் - ஆகஸ்ட் 2020 இதழ் பக்கங்கள் 17 முதல் 20 வரை அன்பு கூர்ந்து படித்திடுக.) 
 
ஒரு சிறந்த செலவு குறைந்த சிக்கனமான கட்டுமானப் பொருளாக இல்லாமையால் AAC  கட்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள் என்று கருத்துரைக்கிறேன்.
 
20 ஆண்டுகளாக - பெரும்பாலான பெரிய கட்டுநர்களால் பன்மாடிக் கட்டடங்களில் எடைகுறைந்த AAC  கட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது சரியான மிகச் சிறந்த கட்டுமானப் பொருளன்று என்று மாறுபட்ட கருத்தை நான் எடுத்துரைக்கும்போது உங்களைப் போன்றவர்கள் உணர்ச்சி வயப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறேன். இக்கற்களின் கட்டுமானச் செலவு - எரிசாம்பல் கற்கள் மற்றும் முன்வார்த்த காங்கிரீட் கட்டுகளைவிட (24% மற்றும் 27% சதவீதம் கூடுதல் விலை). AAC கட்டுகளைவிடச் சிறந்த கட்டுமானப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் போது - தேவையின்றி எதற்காக விலை மிகுந்த, குறைபாடுகளை உடைய AAC கட்டுகளைத் தெரிந்தெடுக்க வேண்டும்? AAC கட்டுகளின் எடை குறைவால் அடித்தளம், தூண்கள், விட்டங்களில் 3% முதல் 5% வரையே சேமிப்பு கிடைக்கிறது. 
 
- போரோ தெர்ம் கற்களைப் பயன்படுத்துமாறு நான் பரிந்துரைக்கவில்லை. ஒப்பீட்டு விலைக்காகவே எடுத்துச் சொல்லப்பட்டது. 



உங்கள் ஐயங்களை பதிவு செய்யுங்கள்

Builders Line : Prompt Publication Editor, Subramanyam No:6, Aishwarya Nagar, First Floor, (Behind Chennai Health Foundation),
Thirumullaivayal, Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 185000