Q: அய்யா, பெரும்பாலான கட்டுநர்களும் ஏன் வடிவமைப்பாளர்களும் குறைந்த பாரந்தாங்கும் அடி மண்வகைகளில் - குறிப்பாக விரிவடையும் மென் களிமண் /வண்டல் கலந்த நொய்மணல் மீது கூட அப்படியே அடித்தளத்தை அமைக்கின்றனர். ஆனால் நீங்கள் மட்டும் குறைபாரந்தாங்கும் அடிமண் வகைகளைக் கண்டிப்பாக வலிமைப்படுத்தியும் கெட்டிப்ப்டுத்தியும் (கருங்கல் உடைதூள் : செஞ்சரளை மண் கலவை 1:3 அல்லது சிமெண்ட்: கருங்கல் உடைதூள் 1:10 கொண்டு ) பின்னரே ஏற்ற அடித்தளங்களை அவற்றின்மீது அமைத்திட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றீர். இது எதன் அடிப்படையில் என்று விளக்கலாமா? மேலும் இதனால் ஏற்படும் கூடுதல் பயன்கள் என்ன?
நமக்கு கட்டடக் கலைஞர், கட்டுமான வடிவமைப்பாளர் முதல், கட்டுமான மேற்பார்வையாளர் வரை 50 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தோமோ அதையே திருப்பத் திரும்ப செய்வதும் வசதியாக எளிதாக இருக்கிறது.
கடந்த 50 மண்ணியக்கவியல் (Soil Mechanics and Foundation Engg) துறையில் ஏராளமான முன்னேற்றங்கள், மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகள் புதிதாகப் புகுந்துள்ளன. குறிப்பாக Soil Stabilisation, soil strengthing செய்வதற்கு Geosynthetics எனப்படும் செயற்கை இழை வலைகளும் Vibroflotation எனனும் அதிர்வலை மூலம் கெட்டிப்படுத்தல் போன்றவை சில வளர்ந்த நிறுவனங்களால் மட்டுமே கையாளப்படுகின்றன. மிகச் செலவில்லாமல் Soil pressure bulb Theory - introduction of CNS Layaer Theory (உங்களிடம் Soil Mechanics Book (Latest) இருந்தால் புரட்டிப்பாருங்கள் - சிறிது புரியும் ) வாயிலாக Sand Gravel mix 1:3, filling in layers of 150mm thick and compacting in semidry condition / / அதைவிடச் செலவு குறைவாக Quarry Dust (Stone Crusher Dust) : Gravel 1:3, Semidry and well compacting மூலமாக மண்ணின் காப்பு திறனை (Safe Bearing capacity) இரண்டு மடங்கு/ மூன்று மடங்கு (100KN/m2 to 300KN/m2) மேம்படுத்தலாம்.
இதனால் அடித்தளச் செலவு ஏறக்குறைய 40% வரை குறைகிறது என்பதும் இவ்வாறு செயற்கையாகக் கெட்டிப்படுத்திய மண்ணில் கீழிறக்கம் (Soil Settlement) மிகுதியாகக் குறைகிறது என்பதும் நமக்குத் தெரியவில்லை; தெளிவாகப் புரியவில்லை. புரிந்தாலும் மாற்றிச் செய்ய - மாற்றங்களை ஏற்றுச் செய்ய நாம் இன்னும் பழகிக் கொள்ளவில்லை இப்படி கருங்கல்லுடைதூள் : செஞ்சரளை மண் 1:3 கொட்டி நிரப்பி அடிமண்ணைக் கெட்டிப்படுத்துவதால் கீழ்க்கண்ட பயன்கள் பெறப்படுகின்றன.
1. அடிமண்ணின் தாங்குதிறன் இருமடங்கிற்மேல் மேம்படுத்தப்படுவதால் அடித்தள அமைப்புச் செலவு 25% முதல் 40% வரை குறைகிறது.
2. அடித்தளத்தைத் தாங்கும் மண் செயற்கையாகக் கெட்டிப்படுத்தப்படுவதால் அடித்தள கீழிறக்கம் (Foundation Settlement) பெரும்பாலும் தடுக்கப்படுகிறது.
3. மண்ணின் பாதுகாப்புத் தாங்கு திறன் கூடுவதால் - எளிய - செலவு குறைந்த அடித்தள வகைகளை (Isolated Footings, Combineed Strip Footings etc) பன்மாடிக் கட்டடங்களுக்கும் பயனபடுத்த முடிகிறது. இப்பொழுது மாற்றத்திற்கு நீங்கள் தயாரா?
Q: வீரப்பன் அங்கிள்! நான் சென்ற பிளஸ் டூ தேர்வில் நல்ல மார்க்கு வாங்கி விட்டேன். 1013 எடுத்து உள்ளேன். எனக்கு சிவில் படிக்க ஆசை. ஆனால். ப்ரண்ட்ஸ் எல்லாம் என்னிடம் இப்போ சிவிலுக்கு மார்க்கெட் இல்லை , என்கிறார்கள்.. கட்டடவியல் தவிர எனக்கு எதுவும் படிக்க பிடிக்க வில்லை.. மேலும் சிவிலிலேயே பல பிராஞ்சுகள் இருப்பதாக சொல்கிறார்கள். உங்கள் ஆலோசனை என்ன? கண்டிப்பாச் சொல்லவும். - மே. மோனிஷ் குமார், வேலூர்
இன்றைய நிலவரம் 4 ஆண்டுகள் கழித்து மாறலாம். கட்டுமானப் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைகள் நிறைய கிடைக்க வாய்ப்புண்டு.
கட்டிடவியல் தவிர ஆர்க்கிடெக்சர், Marine Engineering என்ற படிப்புகளையும் படிக்கலாம். தெளிவாக விசாரித்துப் பாருங்கள்.
Q: சார்! நான் கட்டுமானத்துறைக்கு புதிய பொறியாளன். எனக்கு திருத்தணி அருகே அரை கிரவுண்டில் தரை தளம் வீடு ஒன்றைக் கட்டும் வேலை வந்துள்ளது. 3 ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் தன்னந்தனியே வேலை எடுத்து செய்வது இதுவே முதல் தடவை. இந்த பணி மிகவும் சவாலாக இருக்கிறது. தரை மட்டம் சரிவாக..ஆங்காங்கே பாறைகள் பதிந்து இருக்கிறது. இது போல மலைப்பாங்கான, சரிவான பகுதிகளில் கட்டுமானம் உருவாக்கும்போது எங்களைப் போன்ற இளம் பொறியாளர்களுக்கு நீங்கள் சொல்லும் அடிப்படை ஆலோசனை என்ன? - பொறி. ஜீவ பிரகாஷ், திருவள்ளூர்
தரைமட்டம் சரிவாக ஆங்காங்கே பாறைகள் பதிந்திருப்பதனாலே ஒரே மட்டத்தில் அடித்தளம் அமைக்க முடியாது. ஒவ்வொரு தூணுக்கும் அங்கே இருக்கும் பாறைகளுக்குகேற்ப Benching செய்து பாறையில் துளைகள் போட்டு கம்பிகள் விட்டு Grouting செய்து அடித்தளம் அமைக்க வேண்டும்.
அனுபவம் வாய்ந்த கட்டுநரிடம் கருத்துரை கேட்டு வேலையைச் செய்யுங்கள்.
Q: சார்! நான் சென்னை புரசையில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன். வீட்டிற்கு பின்புறம் ஓரு வீட்டு வீடு வெகு நாட்களாக இருந்தது. இப்போது அதை இடித்து புது வீடு கட்டுகிறார்கள். ஆனால் வீட்டை சுற்றி இடம் விடாமல் கட்டடம் கட்டுகிறார்கள். இதனால் எங்கள் வீடுகளுக்கு காற்று, வெளிச்சம் வசதி கிடைக்காது. “செட் பேக்’ விடாமல் கட்டும் அவர்கள் செயலை எங்கள் குடியிருப்புச் சங்கம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எங்கு போய் புகார் தெரிவிக்க வேண்டும்? - கா. ஜானகிராம், நகைக்கடை அதிகாரி, சென்னை
கட்டட கட்டுமானக் கட்டுப்பாட்டு விதிகளின் படி Side Set Back விட்டுத் தான் எந்த புதிய வீட்டையும் கட்ட வேண்டும்.
Side Set Back விடாமல் கட்டினால் அது வீதிமீறலாகும். மாநகராட்சியிலும் CMDA - விலும் புகார் தெரிவியுங்கள்.
Q: அய்யா! என் வீடு சென்னை புது வண்ணைப் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அரை கிரவுண்டில் உருவான ஜி+2 கட்டுமானம் அது. முழுதும் பாரம் தாங்கும் கட்டுமானமாகவே அதைக் கட்டி இருக்கிறோம். வீட்டில் நுழையும் போது இடது பக்கம் வராந்தாவாகவும் ( நடை) வலது பக்கம் ஒரு காலி அறையாகவும் கட்டி இருந்தோம் ( தட்டு முட்டு சாமன்கள் போட்டு வைப்பதற்கு) அதன் அளவு 14 அடிக்கு 11 அடியாகும். இப்போது அந்த காலி அறையின் கீழே பூமிக்குள் ஒரு நிலவறைத் தொட்டி (8 X 10 X 6 அளவில்) அமைக்க இருக்கிறோம் . இந்தக் கட்டுமானத்தினால் அஸ்திவாரத்திற்கு ஏதும் ஆபத்து வருமா? இது போல் சிறிய தொட்டி அமைக்க நாங்கள் ஏதும் நகராட்சியிடம் சிறப்பு அனுமதி வாங்க வேண்டுமா? உங்கள் பாதுகாப்பு ஆலோசனை மற்றும் கட்டுமானப் பணி ஆலோசனை என்ன? ச.டேவிட், புது வண்ணை, பத்திரிகையாளர்
உங்களுடைய பாரம் தாங்கும் பழைய கட்டுமானத்தைப் பற்றிய தகவல்கள் போதாது. அந்த கட்டடத்தின் அடித்தள ஆழம் எவ்வளவு? என்பது தெரிந்தால் ஒழிய உங்கள் வீட்டின் காலி அறையின் கீழே கீழ்நிலை தண்ணீர்த் தொட்டி கட்டுவதைப் பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்க இயலாது. பழைய அடித்தளத்திற்கு மேலே புதிய தண்ணீர் தொட்டியினுடைய அடித்தளம் இருக்குமானால் கட்டலாம். அதற்கும் நகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|