Q: ஹாலுக்கு எந்த அளவு? அய்யா! 1000 ச.அடியில் ஒரு ஹால் 2 படுக்கையறைகள் கொண்ட வீடு கட்ட இருக்கிறேன். நான் ஹால் அளவு எவ்வளவு வைக்க வேண்டும்? ஏனென்றால், 18க்கு 25 என விசாலமாக கட்ட வேண்டும் என்பது என் அவா. என் பொறியாளரோ ஹால் அமைப்பதற்கென்று சில ஐடியல் அளவுகள் உள்ளன அதன் படி தான் கட்ட வேண்டும் என என் ஆசைக்கு தடை போடுகிறார் எது சரி? அந்த ஸ்டாண்டர்ட் அளவுகள் என்ன? - அமுதன், வழக்கறிஞர், எண்ணூர்.
1000 ச.அடி உள்ள வீட்டின் வரவேற்பு அறைக்காக 16’ X 20’ அளவில் அமைக்கலாம் . இதுவே போதுமானது. மனையடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் அளவுகளில் அமைத்தலும் சரிதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல 1000 ச.அடி வீட்டில் 450 ச.அடி வரவேற்பு அறை மிகப் பெரியது. மற்ற அறைகளுக்கு இடம் போதாமல் போய்விடும். எனவே, உங்கள் பொறியாளர் சொல்வதை கேளுங்கள்.
Q: இரும்புக்கம்பியின் வளையும் தன்மை ! முன்னணி பிராண்ட் இரும்புக் கம்பிகளில் கிரேட் 40 மற்றும் கிரேட் 60 ஆகியவற்றின் Yield Strength மற்றும் Ultimate Strength என்னவாக இருக்கும் என்பதை கூற முடியுமா? - பாஸ்கர், கட்டட ஒப்பந்தக்காரர்
திரு. பாஸ்கர் அவர்களே! கட்டட ஒப்பந்தக் காரராக இருந்துக் கொண்டு வெளிச்சந்தையில் விற்கப்படும் எஃகு உறுதியூட்டிகளின் தரங்களைத் தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்? என்று தெரியவில்லை. எஃகு கம்பிகளின் Grade 40,60 என்றெல்லாம் ஒன்று இல்லை.
மாறாக Grade Fe 415, Fe 500, Fe 500D, Fe 550, Fe 550D, முதலிய தரங்கள் தான் உள்ளன. இந்த எஃகு கம்பிகள் Yield Strength (Fe 500 N / mm2 / Fe 550N / mm2) Fe 415N / mm2 Ultimate Strength என்று பொருள்.
Q: சார் ! நான் ஒரு ஹோட்டல் 7 லாட்ஜ் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எரிசாம்பல் கொண்டுக் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுதும் மரத்தகடுகள் கொண்டு மூடப்படுகின்றன. சுவர் மேற்பூச்சுக்கு பதிலாக டைல் மார்பிள்கள் மரத்தகடுகள் கொண்டு மூடகூடாது என்பது தானே சரி விளக்கவும். - பொறி. செழியன், திருவண்ணாமலை.
நீங்கள் குறிப்பிடும் கட்டடம் ஒரு உணவகம் ஆகவும் தங்கும் விடுதியாக இருப்பதால் மரத் தகடுகள் கொண்டு (Wooden Panelling) மூடப்படுகின்றன. இதனால் கட்டடத்தினுள் உள்வரும் அதிக வெப்பத்தைத் தடுக்கலாம். AC க்கு தேவைப்படும் மின்சாரமும் குறையும் Wooden Panels / Sound Insulating Materlal ஆகவும் பயன்படுகிறது.
எனவே மரத் தகடுகள் பயன்படுகிறது. எனவே மரத் தகடுகளைப் பயன்படுத்துவது சரிதான்.
Q: சார்! நான் சிவில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறேன். எங்கள் வீட்டின் அருகே 30 மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டி வருகிறார்கள். அதில் இரவு நேரத்தில் கட்டட உச்சியிலிருக்கும் கிரேனிலிருந்து சிவப்பு விளக்கு ஒளிர்ந்து அணைகிறது. இது எதற்கான சமிக்ஞை எனத் தெரிந்து கொள்ளலாமா? - விக்னேஷ், ஜி, பெரம்பூர்
பன்மாடி அடுக்குக் கட்டடங்களில் உயரத்தில் ஒளிர்ந்து அணையும் விளக்குகளை நிறுவ வேண்டும் என்பது ஒரு கட்டட விதிமுறை. வானில் பறந்து வரும், விமானங்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும். சென்னை மீனம்பாக்கத்திற்கு அருகிலுள்ள பல்லாவரம், St Thomas Mount மலையில் கூட இத்தகைய ஒளிர்ந்து அணையும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Q: வீரப்பன் சார்! நான் மேகலாயாவில் குடிநீர் குழாய் பதிப்பு புராஜ்க்ட் ஒன்றில் ஈடுபட உள்ளேன். எனக்கு தொலை தூர வாட்டர் பைப்பிங் கன்ஸ்ட்ரக் ஷன் தொடர்பான நூல்கள் தமிழில் கிடைக்குமா? சிறு சிறு கட்டுரைகளாக இருந்தாலும் பரவாயில்லை. அதே போல் அத்துறையில் முன்னம் பணியாற்றியவர்கள் எழுதிய ஆங்கில கட்டுரைகள் இருந்தாலும் அனுப்பி வைக்கவும். உதவி செய்யவும். (இணையதளத்தில் கிடைப்பவை அத்தனை உதவிகரமாக இல்லை) பொறி. கே. நிக்சன் ராஜ் ., ஹோசூர்,
மேகலயா மலைகள் சூழ்ந்த மேடு பள்ளமுள்ள பகுதியாக இருக்கும். அதில் தண்ணீர் வழங்கும் குழாய்கள் பதித்தல் சவாலான வேலை தான்.
எனவே அங்கே இப்படிப்பட்ட வேலைகளை எப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து செய்வது நல்லது. இது தொடர்பாக எல்&டி போன்ற நிறுவனத்தாரை உதவிக்கு அணுகுங்கள்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|