Q: வீரப்பன் சார்... நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.. சென்ற மாதம் வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்டச் சாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தில் ஏற்பட்ட கார் விபத்திற்கு அரசு பொறியாளர்கள் தானே காரணம்..? அதே போல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் கதவு உடைந்ததற்கும் அரசு பொறியாளர்களின் அலட்சியம் தானே காரணம்? ஆர்.மதிவாணன், மணப்பாறை, ஆசிரியர்.
மணப்பாறை மதிவாணனுக்கு வணக்கமும் வாழ்த்தும்.
1. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் கட்டி முடிக்கப்படாத பாலத்தின் மீது கார் சென்றதற்குக் காரோட்டி பொறுப்பில்லையா? முழுமையாகாத பாலத்தில் கார் ஓட்டியதே தவறு. உரிய அறிவிப்புகள் மாற்றுவழி பதாகைகள் அமைக்கப்படாமலிருந்திருந்தால் அரசு நெடுஞ்சாலை (தேசிய நெடுஞ்சாலை) பொறியாளரும் பொறுப்பேற்க வேண்டும்.
2. திரு. மதிவாணன் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் தளத்திற்குச் சென்று நேரே விசாரிக்காமல் செய்தித்தாள் தொலைகாட்சி தகவலின் அடிப்படையில் மேலும் அரசுப் பொறியாளர்கள் மீது உள்ள வெறுப்புணர்வு காரணமாகவும் அரசுப் பொறியாளர்களின் அலட்சியமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்.
அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்களின் பொறுப்பிலுள்ள பொறியாளர்களின் சங்கடங்களைச் சொன்னால் இந்தப் பக்கம் போதாது. 10 பணியாளர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு பணியாளர் இருக்கிறார். ஆண்டுப் பராமரிப்பிற்காகத் தரவேண்டிய தொகை ரூ. 50 இலட்சத்தில் வெறும் ரூ. 2.00 லட்சம் மட்டுமே தரப்படுகிறது. அரசினர்க்கே அணைகளை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறையே இல்லை என்ன செய்வது?
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முதலாவது மதகின் இருப்புக் கதவு உடைந்ததற்கு அந்த தகடு சாக்கடை கலந்த தண்ணீரால் அரிக்கப்பட்டு பலவீனம் அடைந்ததே உண்மையான காரணம்; மற்ற மதகுகளின் கதவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீர் - பெங்களூரு வழியாக வரும்போது அவர்கள் சாக்கடைத் தண்ணீரை (Sewage Waste Water) இந்நதித் தண்ணீரில் கலந்து விடுகிறார்கள். இந்தச் சாக்கடைத் தண்ணீர் தான் மதகின் இருப்புக் கதவுகளை அரித்துவிடுகிறது. எனவே கிருஷ்ணகிரி அணையில் எல்லா மதகுக் கதவுகளையும் புதிதாகப் போடப் போகிறார்கள். அப்படிப் போடும்போது சாக்கடைத் தண்ணீர் அரிக்காத Epoxy Paint ஐ இருப்புக் கதவுகளில் அடிக்கப் போகிறார்கள். இப்பொழுது திரு.மதிவாணன் அவர்களுக்கு மகிழ்ச்சி தானே!
Q: நான் பொத்தேரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சிறு கால்வாய் பாலம் கட்டும் புராஜெக்டில் பணிபுரிய உள்ளேன். இது எனது முதல் புராஜெக்டாகும். ஒரு பொதுப்பணி புராஜெக்டை மேற்கொள்ளும் போது சைட் பொறியாளர் நான் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்ன என்பதை கூற முடியுமா? பொறி. சம்பத், திருவண்ணாமலை.
பாலம் கட்டும்போது களப் பொறியாளர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் கீழே
1. பாலத்தின் இருபக்கங்களில் 10 அடிக்கு முன்பே சாலையை அடைத்துவிட வேண்டும். இரவு நேரங்களில் Retro Reflective Signals கண்டிப்பாக வைத்திட வேண்டும்.
2. 50 அடிக்கு முன்பாகவே மாற்று வழி சரியாகப் போடப்பட்டு ஊர்திகள் திருப்பிவிடப்பட வேண்டும். இது ஒப்பந்த வேலையின் முக்கியமான ஒரு பகுதியாகும். மாற்றுப் பாதையை ஏனோ தானோ என்று போட அனுமதிக்கக் கூடாது.
3. பாலம் கட்டும் போது கால்வாயில் தண்ணீர் இருந்தால் இறைத்திட தனி பம்பு மோட்டார் வசதி - மிகக் குறைந்தது டீசல் இஞ்சின் கொண்டாவது தண்ணீர் இறைக்கப்பட வேண்டும்.
4. பாலத்தின் மீது காங்கிரீட் போட வலிமையான உறுதியான தாங்கமைப்புகள் (Centering & Shuttering) அமைக்கப்பட வேண்டும்.
5. இவற்றுடன் பாலத்தின் இரு பக்கங்களிலும் - ஒரு பணியாளர் சிவப்புக் கொடியுடன் - போக்குவரத்தைச் சீர் செய்திட ஏற்பாடு செய்திட வேண்டும்.
Q: வாசகர் கேள்வி...... நாங்கள் போருரில் ஒரு நான்கு மாடி பன்னடுக்கு குடியிருப்பில் ஃப்ளாட் ஒன்றை வாங்க உள்ளோம், அதில் உள்ள வசதிகள், மார்பிள், டைல்ஸ், பாத்ரும், ஃபிட்டிங்குகள் எல்லாம் எங்களுக்கு திருப்தியாக உள்ளது, ஆனால், பீம்களின் அளவு மட்டும் தான் இடிக்கிறது, வழக்கமாக பில்லர்கள் குறைந்தபட்சம் ஒரு அடிக்கு ஒரு அடி கனம் இருக்க வேண்டும். அல்லவா? ஆனால், இங்கு பில்லர்கள் 10 அங்குலம் x 18 அங்குலம் அளவுகளில் இருக்கிறது, இது சரியா? -லஷ்மி ப்ரபா, அலுவலக மேலாளார், வளசரவாக்கம்.
பொறி.அ.வீரப்பன் பதில்கள்
தங்கள் கேள்வியில் 4 மாடி பன்மாடிக் குடியிருப்பின் கீழ்க்கண்ட அடிப்படைத்தகவல்கள் இல்லை
(1) மண்ணின் வகை,
(2) அடித்தள அமைப்புமுறை
(3) தரைத்தளத்தின் கார்பார்க்கிங் உண்டா, இல்லையா? மூன்றாவது பயன் படுத்தப்பட்ட காங்கிரீட் மற்றும் எஃகு கம்பிகளின்தரம்
(4) உங்கள் தளத்தில் உள்ள விட்டங்களின் அளவுகள் மற்றும் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் முதலியன தரப்படவில்லை,எனவே,நிறுத்தப்பட்டுள்ள தூண்களின் அளவுமட்டும் (10”X 18”) கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பொருத்தப்பட்ட எஃகு கம்பிகளின் அளவும் எண்ணிக்கையும் தரப்படவில்லை, எனவே, அமைக்கப்பட்டுள்ள தூண்கள் போதுமா, போதாதா என்று உடனடியாக உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
பொதுவாக பன்மாடிக்குடியிருப்புகளில் Weak beam and strong column (their structural stiffers = [ Ixx = Zxx / Zxx ] (மவுலிவாக்கம் பன்மாடி கட்டிடத்தில் Strong beam & weak cloumn ஆக இருந்ததால் தான் உடைந்து விழுந்தது) என்ற வடிவமைப்பு முறை கடைபிடிக்க வேண்டும். தோராயமாக நான்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் அல்லது முதல்மாடியில் மையப்பகுதியில் இருக்கும் தூண்களில் 80 டன் முதல் 100 டன் வரை [ 100KN To 1000KN ] பாரம் வரலாம் உங்கள் குடியிருப்பில் உள்ள தூண் 9’’ x 18’’ ( 230mm x 450mm ) மற்றும் 6-20mm + 4-12mm உள்ள கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தால், அவை மேலே குறிப்பிட்ட 80 டன் முதல் 100 டன் பாரத்தை பாதுகாப்பாக தாங்கும். 1’0” x 1’0’’ உள்ள தூணைவிடை 9” x 18’’ தூண் அதிக வலிமையுடையது.
எதற்கும் உங்கள் கட்டுமானத்தின் உரிமையாளர்/ விற்பனையரிடம் Structural design drawings (கட்டுமான வடிவமைப்பு வரைபடங்கள் ) இவற்றின் பிரதி கேட்டு அமைக்கப்பட்டுள்ள தூண்கள் பாதுகாப்பானவையா என்று ஒரு வடிவமைப்புப் பொறியாளரிடம் கொடுத்து அவை போதுமானவை என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Q: வாசகர் கேள்வி...... வெப்பக்காலத்திற்கு ஏற்றார்போல் வீடுகளை வடிவமைப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள எனக்கு ஆசை? வேலுரில் 1200 சதுர அடியில், மெற்சொன்னபடி வீடு கட்ட திட்டமிட எங்களுக்கு நீங்கள் சொல்லும் பொதுவான ஆலோசனை என்ன? ஆ.சிற்றரசு, அரசியல் பிரமுகர். வேலூர்
பொறி.அ.வீரப்பன் பதில்கள்
வேலூரில் விடுகட்டப்போகும் நீங்கள் அங்கு நிலவும் கூடுதலான வெப்பத்திற்கு ஏற்ப வீடு கட்டத்திட்டமிடுவது பாராட்டத்தக்கது. கீழ்க்கண்ட கருத்துரைகளை நீங்கள் கடைபிடிக்கலாம்.
(1) வீட்டினுள் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் நிலவ பெரிய அளவில் நிறைய சன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்களைப் பொருத்த வேண்டும்.
(2) வரவேற்பு அறையில் உயரக் கூரை அமைத்து (Double Storey) - FRP (Fibre Reinforced Plastics) double wall Poly carbonate Sheet கொண்டு மூடினால் வெளிச்சம் கூடுதலாகவும் வெப்பம் குறைவாகவும் இருக்கும்.
(3) சுற்றுச்சுவரை ஒட்டி நிழல் தரும் மரங்களை வைத்து வளர்க்கலாம்.
(4) சாதாரண செங்கலுக்கு பதிலாக பிளை ஆஷ் செங்கற்களைப் பயன்படுத்தவும். செலவு கூடுதல் பற்றி கவலைப்படாமல் இருந்த்தால் UPVC சென்னல்களைப் பயன்படுத்தலாம். செலவு குறைய வேண்டும் என்றால், டெரகோட்டா (Terracotta) ஜாலிகளை அமைக்கலாம்.
மேலும் விவரம் அறிய பசுமைக்கட்டிட வடிவமைப் பாளரை அணுகுங்கள் .
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Q: காம்பவுண்ட் கேட் என்றால் இடமும், வலமும் தான் திறக்க வேண்டுமா? பூமிக்குள் போய் அழுந்துவது போல் காம்பவுண்ட் கேட்டை வடிவமைத்தால் என்ன?
இடத்தை சேமிக்கும் பிரமாதமான ஐடியா இது,
மின்சாரத்தால் இயங்கும் இந்த கேட்டினை மின் தடை சமயங்களில் இயக்க பவர் பேக் பேட்டரி வசதியும் உண்டு.
மழைக்காலங்களின் போதும் நீர் உள்ளே போகதவாறு இறுக்கமான கேஸ்கட்டும் (Gasgat) பொருத்திக் கொள்ளலாம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|