Q: அய்யா. எஃகிழை உறுதியூட்டிய காங்கிரீட் (Steel Fibre Reinforced Concrete SFRC) தரைத்தளங்களின் நன்மைகள் என்ன என்பதைக் கூற முடியுமா?
தொழிற்சாலைகளின் தரைத்தளம் (Basic Flooring ) போடுவதற்குப் பல ஆண்டுகளாகவே எஃகுக் கம்பிகள் உறுதியூட்டிய உயர்தரக் காங்கிரீட்டை (M20,M25,M30) பயன்படுத்தி வந்தார்கள். இத்தகைய தளங்களின் மேல் பரப்பில் ஆங்காங்கே இழுவிசை விரிசல்கள் (Tensile Surface Cracks ) ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. (Cross section of Flooring Concrete).
ஆனால் அண்மைக் காலங்களில் பல வடிவமைப் பாளர்களும் கட்டுநர்களும் Steel Rebars க்குப் பதிலாக Steel Fibres - ஐ பயன்படுத்திக் காங்கிரீட் தளங்களைப் போட்டு வருகிறார்கள். (Cross Section of SFRC Dramix Steel Fibre ) 10 கிலோ முதல் 30 கிலோ ஒரு கனமீட்டருக்கு காங்கிரீட்டில் கலக்கிறார்கள்.
எஃகிழை உறுதியூட்டிய காங்கிரீட் தரைத்தளங்கள் கீழ்க்கண்ட நன்மைகளை / பயன்களை உடையவையாக உள்ளன.
மேல் தளப்பரப்பில் இழுவிசை விரிசல்கள் பெரும்பாலும் விழுவதில்லை.
* தரை இணைப்புப் பகுதிகளில் முனைகள் பொடிந்து விழுவதில்லை.
* தரை இணைப்புகள் போதுமான தாங்கு வலிமை உடையனவாக உள்ளன.
* தரைப்பரப்பு கூடுதலான தாக்கு விசையினைத் (Impact) தாங்குகிறது.
*அடிக்கடி திரும்பத்திரும்பப் பயன்படுத்து வதற்கேற்ற தடுப்புத் தன்மையுள்ளதாக இருக்கிறது.
* குறிப்பாக தரைத்தளப் பராமரிப்புச் செலவு குறைகிறது.
* கூடுதலான காலத்திற்குப் பயன்படத்தக்க அளவில் அமைகிறது.
இந்த எஃகிழை கலந்த காங்கிரீட்டை எங்கெங்கே பயன்படுத்தலாம்?
* சுரங்கங்களுக்கு உள் மேலுறை அமைத்திட
* தொழிற்சாலை மற்றும் சரக்கறைகளின் தளங்கள்
* முன்வார்த்த (கனங்குறைந்த) காங்கிரீட் சுவர்கள்
* முன்வார்த்த காங்கிரீட் குழாய்கள் தயாரித்திட சாலைகள், பாலங்கள், விமான ஓடுதளங்கள் முதலியவைகளின் அடித்தளங்களின் கீழே / மேலே காங்கிரீட்டு பலகங்கள் அமைக்க மழைநீர் வடிகால்கள் / கழிவு நீர்க்கால்வாய் இவற்றின் மூடுபலங்கள் இப்படி எண்ணற்ற காங்கிரீட் வேலைகளுக்கு எஃகிழைக் காங்கிரீட்டைப் பயன்படுத்துவோம்.
தரமான உறுதியான கட்டுமானங்களை உருவாக்குவோம்.
Q: உலகக் கட்டக்கலையின் தலைநகராக பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோ நகரை யுனைஸ்கோ தன்னிச்சையாக தேர்வு செய்திருக்கிறது. கட்டடக்கலைக்கு எனப் பெயர் பெற்ற நாடுகளில் பிரான்ஸ், இந்தோனேஷியா,இந்தியா, சீனா போன்ற நாடுகள் இருக்க யுனைஸ்கோ பிரேஸிலை தேர்ந்தெடுத்தது சரியா? இதை ஒரு கட்டுமானப் பொறியாளர் என்னும் முறையில் நீங்கள் ஏற்கிறிர்களா? -இரா. மதிவாணன், ஆசிரியர், மணப்பாறை
மதிவாணன் அவர்களே, உங்களுடைய கேள்வினுடைய உள்பொருள் எனக்குப் புரியவில்லை யுனேஸ்கா விவரங்களை நன்கு திரட்டி, முழு நிலையையும்தெரிந்த பின்பு தான் ஒரு நகரைத் தேர்ந்தெடுகிறது. இதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
Q: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து விட்டார்கள். ஆனால் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து கட்டுமானத்தில் பயன்படுத்தலாம் , அதனால் கட்டுமானச் செலவுகள் குறையும் என பத்திரிககைகளில் செய்தி வருகின்றனவே. அதை எவ்வாறு எவ்விதத்தில் கட்டுமானத்தில் பயன்படுத்த முடியும் என நீங்கள் விளக்கமாய் கூற முடியுமா? -ஆர். வீரசோழன், தஞ்சாவூர்
பிளாஸ்டிக்கு தடை விதித்ததனால் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து கட்டுமானத்தில் பயன்படுத்த பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சாலைகள் போடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்? எவ்வளவு செலவு குறைகிறது? என்ற புள்ளி விவரங்கள் என்னிடம் இல்லை. இது பற்றி மேலும் அறிய இணையதளத்தைப் பார்த்திடுக.
Q: அய்யா.., நான் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து விட்டு களப்பணிக்கு சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஒரு பொறியாளன். நான் படித்த சிவில் பாட திட்டத்துக்கும் தற்போதைய நடைமுறை களப்பணிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் யாதொரு தொடர்புமின்றி தவிக்கிறேன். என்னால் ஒரு பிளானைப் பார்த்து புரிந்து கொள்ளக் கூட முடியவில்லை. நான் 15 ஆண்டுகாலம் பின் தங்கி இருப்பதாக உணர்கிறேன். இணைய தளம், பில்டர்ஸ் லைன் போன்ற தகவல் ஊடகங்களைத் தான் நம்பி இருக்கிறேன். இது நான் படித்த கல்லூரியின் தவறா? அரசாங்கத்தின் தவறா? அல்லது என் தவறா? - ஆர். பிரவீண் குமார், சென்னை
இதுதான் இன்றைய பொறியியல் பாடத் திட்டத்திற்கும் எதார்த்த களப்பணிக்கு உள்ள வேறுபாடு. எனவேதான் நான் தொடர்ந்து ‘கட்டுமானப் பொறியியல் பேராசிரியர்கள் கெம்பாவுக்கு வரட்டும்; பொறியியல் மாணவர்கள் கெம்பா’ வில் இருக்கட்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன். புதிதாகப் படித்த பொறியியல் மாணவர்களுக்குக் குறைந்தது ஓராண்டாவது களப்பணியில் பயிற்சிகள் கட்டாயமாக தரப்பட வேண்டும். அப்பொழுதுதான் நிலமை சரியாகும்.
ஒரு பிளானைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது, தற்கால கல்விமுறை மிகவும் மோசமான கல்வி முறை என்னும் உண்மையைச் சொல்கிறது. இவையயல்லாமே அரசாங்கத்தின் திட்டமிடாத தவறு என்றே சொல்லலாம்.
Q: அய்யா. கட்டுமானத்துறை தொடர்பாக பல்வேறு நகரங்களில் பலப்பல கருத்தரங்குகள் நடக்கின்றன. தங்களைப் போன்ற மூத்த பொறியாளர்கள், நிபுணர்கள் அதில் உரையாற்று கிறார்கள். அதில் இளம் பொறியாளர்கள் மற்றும் சீனியர் பொறியாளர்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டு தங்கள் ஐயங்களைக் கேட்கிறார்கள். ஆனால் என் போன்ற மாணவ, மாணவியர்களுக்கு தனியாக ஏதும் கட்டுமானப் பயிலரங்குகள் நடக்கின்றதா? (ரூ.2,000 , ரூ, 3000 என அதிகக்கட்டணம் இல்லாமல்..?) -மதிவதனி., பி.இ. சிவில் பொறியியல் மூன்றாம் ஆண்டு, திருச்சி
அன்புள்ள சகோதரி மதிவதினிஅவர்களே, பொறியியல் மாணவர்களுக்கு என்று தனியாக கட்டுமானப் பயிலரங்குகள் யாரும் நடத்துவதாகத் தெரியவில்லை. அதுவும் நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல மிகக் குறைந்த கட்டணமாக (ரூ 1000க்கு) செய்யமாட்டார்கள்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|