‘எம்-சாண்ட்’ அனுமதி: நிறுவனங்களுக்கு பயிற்சி
14 ஜூலை 2018   12:57 PM



‘எம்-சாண்ட்’ தயாரித்து விற்பனை செய்ய, அரசிடம் அனுமதி பெறுவது தொடர்பாக, தனியார் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், எம்-சாண்ட் குவாரிகளுக்கான அனுமதியை, கனிமவளத் துறையிடம் பெற்றுள்ளன. பொதுப்பணித்துறை அனுமதி பெற்ற, எம்-சாண்டை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, கட்டுமான நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
 
வழிமுறைகள்
இதுவரை, 24 நிறுவனங்களுக்கு மட்டுமே, எம்-சாண்ட் தயாரித்து விற்பனை செய்ய, பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், 15 நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன. மற்ற நிறுவனங்கள், பொதுப்பணித்துறையின் அனுமதி பெறாமல் தரமற்ற, எம்-சாண்ட் தயாரித்து விற்பது அதிகரித்துள்ளது. அதே நேரம், எம்-சாண்ட் தயாரிப்புக்கான அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள், பல நிறுவனங்களுக்கு தெரியவில்லை.
 
முகாம்
எனவே, அரசு உத்தரவுப்படி, எம்-சாண்ட் தயாரிப்பில் ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு, பொதுப்பணித் துறை சென்னையில் பயிற்சி முகாம் நடத்தியது. இதில், 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2146414