சிமென்ட் விலை மூட்டைக்கு ரூ.60 உயர்வு வீடு கட்டுவோர் அதிர்ச்சி
11 அக்டோபர் 2021   05:25 PM



சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

 

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்ந்து, தற்போது தான் கட்டுமான பணிகள் சூடுபிடித்துள்ளன.

 

சில மாதங்களுக்கு முன் சிமென்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாய் உயர்த்தப்பட்டது. கட்டுமானத் துறையினர் முறையிட்டதை அடுத்து, சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தியது.

 

முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, சிமென்ட் நிறுவனங்கள் விலையை குறைத்தன. இதனால், மூட்டை 500 ரூபாய் வரை சென்ற சிமென்ட் விலை 440 ரூபாயாக குறைந்தது.

 

மீண்டும் உயர்வு
இந்நிலையில், தற்போது சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.சில வாரங்களாக சில்லரை விற்பனையில், மூட்டை 420 ரூபாயாக இருந்த சிமென்ட் விலை, தற்போது 480 ரூபாயாக உயர்ந்துள்ளது.இது குறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது:

 

தமிழக முதல்வர் தலையீட்டால் குறைக்கப்பட்ட சிமென்ட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது. மூட்டைக்கு 60 ரூபாய் என்பது கட்டுமான பணிகளை முடக்கிவிடும்.இறக்குமதி நிலக்கரியின் விலை உயர்வு காரணமாக, சிமென்ட் விலையை உயர்த்தி உள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு தலையிட்டு, இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1966556