குன்றின் மேலமைந்த 24 மாடிக் கட்டடம்
இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்த படியாக ரியல் எஸ்டேட் பெரு வளர்ச்சியை கண்டிருக்கும் பெங்களூரில் நாட்டில் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் களம் அமைத்து பல்வேறு புதிய ப்ராஜெக்ட் களை உருவாக்கி வருகிறார்கள். பிரெஸ்டிஜ், சோபா லிமிடெட், பிரிகேட் குரூப், கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ், புருவங்காரா, மஹிந்திரா லைப் ஸ்பேசஸ். மன்ட்ரி டெவலப்பர்ஸ், ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ், போன்ற மிகப் பெரிய கட்டுமான நிறுவனங்கள் வரிசையில் டாட்டா ஹவுசிங் நிறுவனமும் தவிர்க்க முடியாததாகும்.
மும்பை, கொல்கத்தா, புவனேஸ்வர், டெல்லி, நொய்டா,குர்கான், புனே, அகமதாபாத், கோவா, சென்னை ஆகிய நகரங்களில் பிரம்மாண்ட பல கட்டுமான ப்ராஜெக்ட்களை டாட்டா ஹவுசிங் மேற்கொண்டு வருகிறது . நாடு முழுக்க பல்வேறு குடியிருப்பு அதிஉயிர கட்டிடங்களை கட்டி ஒப்படைத்து வரும் டாட்டா ஹவுசிங் நிறுவனத்தின் டெல்லி என்.சி.ஆர் ப்ராஜெக்டானன ‘நியூ ஹெவன் பகதூர்கர்ஹ்’ ப்ராஜெக்ட் வட இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
அந்த நிறுவனம் பெங்களூரில் சமீபத்தில் ‘தி பிரமோன்ட்’ என்கிற சூப்பர் டூப்பர் ப்ராஜெக்ட்டை முடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. காரணம் இந்த ப்ராஜெக்ட் அமைந்த அமைவிடம் அப்படி. தெற்கு பெங்களூரில் ‘பான ஷங்கரி’ என்கிற பகுதியில் இருக்கக்கூடிய மலைக்குன்று பகுதிகளில் இந்த குடியிருப்பு ப்ராஜெக்ட் கட்டப்பட்டிருப்பது தான் அதற்குக் காரணமாகும்.
பிரமோன்ட் என்றால் ‘உயர்வு, உயரம்‘ என்று பொருள். இந்த ப்ராஜெக்ட் உயரத்திலும் உயரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வழக்கமாக தமிழ்நாட்டில் மலைக்குன்றுகளின் மேலே இரண்டு மூன்று மாடிகளுக்கு மேல் கட்டடங்களைக் கட்ட அனுமதிப்பது கிடையாது. ஆனால் இந்த கட்டுமான நிறுவனத்திற்கு கர்நாடகா அரசு பச்சைக்கொடி காட்டி இருக்கிறது. அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 24 அடுக்குகள்.
இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மலைக் குன்றுகளின் மீது இத்தனை அடுக்குகள் கொண்ட கட்டடங்களை கட்டியிருப்பது டாட்டா ஹவுசின் நிறுவனத்திற்கு கிடைத்த ஜாக்பாட் என தான் சொல்லவேண்டும். தி புரோமன்ட்டில், ஏறத்தாழ 14 ஏக்கரில் நான்கு தனித்தனி டவராக 312 அப்பார்ட்மெண்டுகள் இதில் கட்டப்பட்டிருக்கின்றன.
இதில் நான்கு டவருக்கும் நான்கு பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கின்றன. அல்மோரா டவர் 20 மாடிகளும், அனரா டவர் 20 மாடிகளும் அல்டிசா 22 மாடிகளும் அல்தூரா என்னும் டவர் 24 மாடிகளையும் கொண்டுள்ளது.
குறைந்தபட்சம் 2300 சதுர அடியில் இருந்து 3700 சதுர அடி வரை என மூன்று, மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்டு வீடுகளாக கட்டப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.
டாட்டா ப்ரோமோன்ட் நிறுவனம் ஏற்கனவே வடக்கு பெங்களூரில். தேவனாஹள்ளியில் கட்டி வரும் “டாடா கர்நாடகா” லக்ஸரி அப்பார்ட்மெண்ட் ப்ராஜெக்ட் கர்நாடக ஆர்க்கிடெக்ட் உலகை அசத்தியிருக்கும் இந்த வேளையில், தெற்கு பெங்களூரில ‘டாட்டா புரோமோன்ட்’ ப்ராஜெக்ட்டும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
மலைமேல் அமைந்திருக்கக்கூடிய அதிஉயரக் குடியிருப்பு ப்ராஜெக்ட் என்பதால், இந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து பெங்களூர் நகரை முழுக்கவே சுற்றி பார்க்க முடியும் என்பது தான் இந்த ப்ராஜெக்ட்டின் ஹைலட்டாக இருக்கிறது. அதனால் தான் என்னவோ இந்த ப்ராஜெக்ட்டின் ஆரம்ப விலையே இரெண்டேகால் கோடி ரூபாய் என்கிறார்கள்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2149889
|