சாலைகளில் உகந்தது தார்ச்சாலைகளா? கான்கிரீட் சாலைகளா என்ற பட்டிமன்றம் காண்ட்ரக்டர்கள், பொறி யாளர்கள் மத்தியில் நீண்ட கால்ம் நிகழ்ந்து வருகிறது. நாம் அந்த விவாதத்தில் போக வேண்டாம். அதை முடிவு செய்ய வேண்டியது அரசுப் பொறியாளர்களே.
இங்கு , கான்கிரீட்டிலான சாலைகளை அமைக்க காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் ஒப்பந்ததாரர்களும், பணியாற்றும் பொறியாளர்களும் கவனிக்க வேண்டிய சில கூறுகள் மட்டும் சுருக்கமாக ஆராய்வோம். மேலும், குடியியிருப்புப் புராஜெக்ட்கள், மற்றும் பல்வகைக் கட்டடங் களுக்கு ஊடாக போடப்படும் கான்கிரீட் தடங்களை (பாதைகளை) அமைக்கும் பணியில் உள்ள கட்டுநர்களும், பொஷீயாளர்களும் கூட இதை உற்று நோக்கலாம்.
சரி இப்போது நம் ஊரில் போடப்படும் கான்கிரீட் சாலைகளில் தரம் எப்படி இருக்கிறது? என்றால், நம் நாட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைப்பதில் சமீபகாலமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்காக நம் நாட்டின் சாலைப் பொறியாளர்களை மிகவும் பாராட்ட வேண்டும்.
வெளி நாடுகளில், இந்த சாலைகளில் ஏற்படும் குறைபாடுகளை தொடர்ந்து முறையாக ஆராந்து முன்னேற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவருகிறார்கள். நம் நாட்டிலும் இதற்காக “”இந்தியன் ரோட் காங்கிரஸ்’’, “”மத்திய சாலைகள் ஆராய்ச்சி நிலையம்’’ போன்றவை டெல்லியிலும் மற்ற இடங்களிலும் அமைந்துள்ளன. சென்னை கிண்டியில் ஒரு சாலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்திய பல்கலைக்கழகங்களும் மேற்கொண்டு வருகின்றன. ஆய்வுகளை தொடர்ந்து செய்து, ஆராய்ச்சி மூலம் நல்ல வழிமுறைகளை, நம்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்ப கண்டறிந்து, பொறியாளர்கள் நமது நாட்டின் சாலைகளில், நமது பயணிகள், வாகனங்களின் நலன்களை போற்றி பாதுகாக்க உதவுவார்கள் என எதிர்ப்பார்ப்போம்.சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்குமுன், நிலத்தின் அமைப்பு, நிலநீர்மட்ட விவரங்கள், மண்/மணல் விவரங்கள், தட்பவெப்பநிலை, மழைஅளவு, சாலையின் வாழ்நாள் போக்குவத்து எண்ணிக்கை, அச்சு பளு முதலியவற்றை கணக்கிட்டு செயற்திட்டமிட வேண்டும். சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் விறைப்பான பலகைகள், பளுவைத் தானே சுமந்து, நிலத்தின்மீது பரவச் செய்யும் தன்மை கொண்டவை, சிமெண்ட் சாலைகள் வெப்பம், ஈரம், பளு, கீழ்நில மாற்றங்களைத் தாங்கும் வலிமை பெற்றிருக்க வேண்டும். சுருங்கி விரியும் வசதி பெற்றிருக்க வேண்டும்.கவனக்குறைவுகள் ஏற்படுமானால் சிமெண்ட் சாலை களுக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும். என்னென்ன குறைபாடுகள் ஏற்படக்கூடுமென்பதை பார்ப்போம்.
1. அசுத்தப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள்கான்கிரீட் சாலைகள் போடுவதின்நோக்கமேநீடித்துஉழைக்கும் என்பதாகும். ஆனால், சுத்தம் செய்யப்படாத, களிமண், உப்புகள் கலந்து மணல், கற்கள், நீர் மற்றும் சோதனை செய்யப்படாத சிமெண்ட் உபயோகித்து கட்டப்படும் சாலைகளில், விரிசல்கள் கான்கிரீட்டில் ஏற்படுகின்றன. சுத்தம் செய்யப்படாத கலப்படப் பொருட்களால் கட்டப்படும் சாலைகளில் பெளதிக, ரசாயன
மாற்றங்கள் ஏற்பட்டு கான்கிரீட் விரிவடைவதால் விரிசல்கள் தோன்றுகின்றன.
2. இணைப்புகளில் உடைப்புகள்இணைப்புகள் இல்லாத கான்கிரீட் சாலைகள், சுருங்கவோ, விரியவோ முடியாமல பழுது அடையக்கூடுமாதாலால், தகுந்த இடைவெளியில் (அதிகபட்சம் 4.5 மீட்டர்) இணைப்புகள் ஏற்படுத்துகிறார்கள். இந்த இணைப்புகளை “”குறுக்குவாட்டு இணைப்புகள்’’ என்பார்கள். இந்த இணைப்புகளை வண்டிகள் தாண்டும்போது, அவற்ஷீன் பளு சரியான முறையில் இணைப்பின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு மாற்றப்பட வேண்டும். அதற்காக இணைப்பின் குறுக்கே கம்பிகளைப் பொருத்துகிறார்கள். இந்த கம்பிகள் துருப்பிடிக்காத பூச்சு பூசப்பட்டு மற்றும் சாலைகள் சுருங்கவும், விரியவும் வசதி தரும் வகையில் அமைந்திருக்க வேன்டும்.கம்பிகளை முறையாக, இணையாக, வரிச்சைப்படுத்தாவிட்டாலோ, எண்ணெய், கிரீஸ் துடைக்காமல் விட்டாலோ, துருப்பிடிக்காத பூச்சு இடாவிட்டாலோ பிடிப்பு ஏற்பட்டு, கம்பிகள் சாலைகள் சுருங்கி விரிவதைத் தடுத்துவிடும். வண்டிகள் சுருங்கி விரிவதைத் தடுத்துவிடும். வண்டிகள் போகும்போது சரியான அளவில் பளுமாற்றம் ஏற்படாது. இதனால் இணைப்புகளின் மீது சார்ந்து வெடிப்புகள் உண்டாக்குகின்றன.
3. வெப்பத்தால் திருகப்பட்ட கான்கிரீட் சாலையில் வெடிப்புகள்சில இடங்களில் ஒரு வழிச்சாலை அமைக்கிறார்கள். பகலில் சாலைகளின் மேல்பகுதி அதிக வெப்பமும், கீழ்ப்பகுதி குறைந்த வெப்பமும், இரவு மற்றும் விடியற்காலை வேளைகளில் மேல்பகுதி, கீழ்ப்பகுதியைவிட குறைவான வெப்பமும் பெறுகின்றன. கீழுக்கும் மேலுக்கும் இடையே ஏற்படும் வெப்ப வேறுபாட்டினால் சாலைகள் திருகப்படுகின்றன. இதனால் சாலைகளின் முனைகளும் ஓரங்களும் தூக்கப்படுகின்றன. சாலைகளின் மேல்பக்கத்தில் இழுவிசை ஏற்படுவதால் விரிசல்கள் உண்டாக்குகின்றன.
சரியான அளவில் நீராற்றுதல் செய்யப்படாத சாலைகளின் மேற்பகுதியில் “உலர்வுச் சுருக்கம்’ ஏற்படுகிறது. சில சமயங்களில் சாலையின் அடிப்பகுதி சாலை சுருங்கி விரிய விடாமல் தடுத்து உராய்வை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் சாலையின் நடுவில் நீளவாக்கிலும், சாலை நடுவே குறுக்கேயும், சாலைகளின் மூலைகளிலும் விரிசல்களை விரைவுபடுத்துகின்றன. மேலும் விரிசல்களின் அளவுகளை அதிகப்படுத்துகின்றன.
நீளவாக்கில் மத்தியஇணைப்பு, தேவையான அளவிற்கு கன, தரமுள்ள உயர் ரக கான்கிரீட், சாலைக்கும் அதன் அடிப்பகுதிக்கும் இடையே உராய்வின்மை, கான்கிரீட்டை சரியான அளவில் நீராய்வின்மை, கான்கிரீட்டை சரியான அளவில் நீராற்றுதல், இணைப்புகளை சரியான நேரத்தில் ரம்பத்தால் அறுத்துவிடுக்தல், இணைப்புகளில் கம்பிகளை சரியான முறையில் பொருத்துதல் போன்ற செயல்களால் இந்த விரிசல்களையோ, வெடிப்புகளையோ தவிர்க்கலாம்.
4. கான்கிரீட் சாலை இணைப்புகளில் ஏற்ற இறக்கம்.பளுவுடன் வாகனங்கள் அதிக அளவில் செல்லும்போது இணைப்புகளைச் சாந்த சாலைகள் வளைகின்றன. சாலையின் கீழ்ப்பகுதி தேவையான உறுதியுடன் இல்லாவிட்டாலும் இணைப்பு கம்பிகள் தகுந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இணைப்புகள் மேல் கம்பிகள் பொருத்தப்படாத சாலைகளில் இந்த நிலை விரைவாக ஏற்படலாம்.
மேலும் கான்கிரீட்டில் உள்ள சிறுகற்கள் தங்களுடைய வடிவமைப்பு, அளவு இவற்ஷீனால் பிணைந்துள்ளன. இந்த பிணைப்பு குறையுமானால் இந்த பழுது ஏற்படலாம்.இணைப்புகள் கீழே மேலே இருக்குமானால் வண்டிகளின் வேகம் குறைந்துவிடுகிறது. இணைப்பை ஒட்டி வெடிப்புகள் தோன்றக்கூடும். மேலும் இந்த பழுதினால் கீழ்ப்பகுதி பாதிக்கப்படுமானால், தரை நீர்மட்டம் உயர்கையில் மண் சேர்ந்து, நீரானது அந்த இணைப்பு வழியே வெளியே வரக்கூடும்.
மூலை விரிசல்கள்சில இடங்களில் மிகப் பொடிதான “மணல் பூமி” யின் மேல் சாலைகள் கட்ட வேண்டி வரும். சில கடற்கரை, நதி ஒரங்கள், மணற்பாங்கானவை. சாலயின் மேல் வரக்கூடிய பளு, கீழேயுள்ள மணற்பூமியை அழுத்திவிடுகிறது. சாலைக்குத் தேவையான நில ஆதாரம் குறைவதால், சாலை வளைந்து விரிசல் காண்கிறது. இத்தகைய மணற்பகுதிகளை உறுதிப்படுத்த மேலே சாலைக்கான அடிப்பகுதியை அமைத்தால் இந்த பழுது ஏற்படுவதை தடுக்கலாம்.கான்கிரீட் சாலை சாதாரணமாக ஓசை ஏற்படுத்துகிறது. இதைக்குறைக்கவும், பயண வசதியை அதிகரிக்கவும், மேலை நாடுகளில் கான்கிரீட் சாலை மேல் பிடுமண் அல்லது “ஆஸ்பால்ட்’ விரிப்பு போடுகிறார்கள். நம் நாட்டிலும் இதுபற்றி விவாதங்கள் நடந்து வருகின்றன.
இத்தகைய சாலைகளில், கான்கிரீட் சாலை மேலேயுள்ள விரிப்பில் பொங்கும் கெடுதி ஏற்படுக்கூடும். கான்கிரீட் பகுதியின் இணைப்புகள் இயங்க முடியாதவாறு நெருக்கப்பட்டால், மேலேயுள்ள “ஆஸ்பால்ட்’ விரிப்பு நகர்ந்துவிடுகிறது. சில சமயம் கான்கிரீட் சாலைக்கும் அதன் அடிப்ப்குதிக்கும் இடையே நீர்புகுந்து, நீர் அழுத்தம் காரணமாக பிடுமண் விரிப்பு தகர்க்கப்படுகிறது.
இணைப்புகள் அருகருகேயுள்ள சாலைகளில் இத்தகைய பழுது ஏற்பட்டால் போக்குவரத்து வாகனங்களின் வேகம் குறைந்து, நெரிசல் ஏற்படலாம். பயணிகளுக்கும் துன்பம் ஏற்படும்.
அடித்தள இறக்கத்தால் விரிசல்கள்நிலத்தடியில் ஆழமான வண்டல்மண் இருக்குமானால் சாலைகளுக்கு இடர்பாடு உண்டாகும். வண்டல்மண் அமுங்கும் தன்மை கொண்டவை. பளு நிறைந்த வாகனங்கள் செல்லும் போதெல்லாம் சிறிது சிறிதாக இறங்கிவிடும். சில சமயம் சாலை அமையும் நிலத்தின் ஒருபுறத்திலோ அல்லது இருபுறங்களிலுமோ சரிவுகளுக்கு முறைப்படி காப்புகள் இட வேண்டும். முறையான காப்புகள் இட வேண்டும். முறையான காப்பு அமையாத சரிவுகள் வழியே நீர் கசியும். வண்டல் மண் வெளியேறக்கூடும். இதனால் சாலை கீழே இறங்கி விரிசல் காணக்கூடும்
கான்கிரீட் சாலை இணைப்புகள் வழியே மண்ணிறைப்புகான்கிரீட் சாலை இணைப்புகள் மற்றும் ஒரே வெடிப்புகள் வழியே மண்கலந்த நீரின் இறைப்பு சாலையின் அடியே நீர் சேர்ந்துள்ளதை அறிவிக்கிறது. சாலை தட்பவெப்பத்தினாலும், சாலைமேல் ஏற்படும் பளுவினாலும், வளையுமானால் நிலத்தடி நீர் சேரச்சேர நீர் அழுத்தம் உயர்கிறது. மழைக் காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாலும், சாலை ஒரத்திலிருந்தும் நீர் வரக்கூடும். அத்தகைய நீருடன்
மண்ணும் கலந்து வரக்கூடும்.
இதனால் ஏற்படும் மண் இறைப்பினால், சாலையின் கீழே குழிகள் ஏற்படுகின்றன. சாலைக்குத் தேவையான பிடிப்பு அதனால் குறையும். இணைப்புகளும் மேலும் கீழும் இறங்கக்கூடும். இதன் விளைவாக சாலை ஒரங்களில் விரிசல்கள் தோன்றுகின்றன. இந்த தொல்லையை குறைக்கும் நோக்கத்துடன், பொறியாளர்கள், நிலத்தடி அடித்தளம் அமைக்க திட்டமிடுகிறார்கள்.
நிறைவாக சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை நீடித்து உழைக்க வைப்பதற்கு, சாலையின் இருபக்கத்திலும் அமையும் வழிகளை கான்கிரீட் வழிகளாக அமைத்து, கம்பிகளால் சாலையுடன் இணைப்பது சிறப்பான மாற்றமாகும்.
முக்கியமாக, தரை அமைப்பு மண்ணியல் ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளுக்கேற்பவே, சாலை அமைக்கம் திட்டங்களை தீட்ட வேண்டும்.தட்பவெப்பம், காற்று வேகம், சாலையின் வாழ்நாளில் வரக்கூடிய போக்குவரத்து எண்ணிக்கை, அச்சுடிய போக்குவரத்து எண்ணிக்கை, அச்சுபளு, மழை அளவு இவற்றை கவணத்தில் கொண்டு திட்ட மிட வேண்டும். தேவையான தரை வழி வடிகால்கள், தரைகீழ் அமைத்தல் மிக முக்கியமாகும். உறுதியாக்கப்பட்ட நிலம், வலிமை நிறைந்த கான்கிரீட், தேவையான போன்றவையும் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. கட்டப்பட்ட சாலைகள் மீது, காலவரைப்படி சோதனைகள் மேற்கொண்டு, ஆய்வுகள் நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதால் இடர்பாடுகள், விரிசல்கள் வராமல் தடுக்க உதவும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2147785
|